74வது குடியரசு தினமான இன்று, உங்கள் வீட்டு அலங்காரத்தில் தேசியக் கொடியின் வண்ணங்களை இணைத்து, வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டாடுங்கள். முதன்மை வடிவமைப்பாப்பார்கள் ஆன அன்கித் மற்றும் ஆனந்த் ஓஜா, ஆனந்த் அட்லியர் அசோசியேட்ஸ், இந்தக் குடியரசு தினத்தில் உங்கள் வீட்டை அலங்கரிப்பதற்கான சில குறிப்புகள் மற்றும் ட்ரிக்ஸ்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.


எப்படி அழகு படுத்துவது?


துணி எந்த இடத்தையும் அழகாக காட்டும் விஷயம் ஆகும். அவை எளிதில் கிடைக்கக்கூடியவை, மீண்டும் பயன்படுத்தப்படக் கூடியவை. மற்ற துணிகளுடன் இணைத்து பொருத்தலாம். உங்கள் இடத்தை அலங்கரிக்க குஷன் கவர்களைப் பயன்படுத்தவும், உங்கள் குங்குமப்பூ நிற குஷன் அட்டைகளை வைக்கவும், பின்னர் சில வெள்ளை மற்றும் கடைசியாக பச்சை நிறத்தை வைக்கவும். தர்ம சக்கரத்திற்கு நீலத்தை சேர்க்க, அதன் அருகில் ஒரு அழகான நீல நிறத்தை பயன்படுத்தவும். இந்த மூவண்ணம் சேர்ந்தாலே இந்திய தேசத்தின் கலை வந்துவிடும் என்கிறார்கள்.



க்ரியேட்டிவாக செயல்படுங்கள்


"அடிப்படைகளை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டாம், க்ரியேட்டிவாக சிந்தியுங்கள். உங்கள் இடத்தில் ஏற்கனவே உள்ள பல்வேறு பொருட்களை ஒன்றாக கொண்டு வாருங்கள். எங்கள் மூவர்ண தீமுடன் பொருந்தக்கூடிய ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதற்கேற்ப ஏற்பாடு செய்யுங்கள்", என்கின்றனர். மூவர்ண துப்பட்டாக்களைப் பயன்படுத்தி உங்கள் நுழைவாயில்களை அலங்கரிக்கலாம் மற்றும் பிளாஸ்டிக் மலர்களால் அடுக்கி வைக்கலாம். இரவுக்கு கூடுதல் தொடுதலையும் பளபளப்பையும் சேர்க்க, மெழுகுவர்த்திகள் அல்லது விளக்குகளைப் பயன்படுத்தவும்.


தொடர்புடைய செய்திகள்: Republic Day 2023: இன்று குடியரசு தினம்.. தேச தலைவர்களின் டாப் 10 சிந்தனைகளும், மேற்கோள்களும்!


புதிதாக செய்யுங்கள்


மூவர்ணங்கள் கொண்டு உங்கள் இடத்தின் தோற்றத்தை மேம்படுத்துங்கள். அதை உங்கள் தோட்டங்கள், பால்கனிகள் அல்லது மொட்டை மாடிகளில் தொங்கவிடலாம். கை ஓவியம் அல்லது மண் பானைகளை முயற்சி செய்து, அவற்றை உங்கள் நுழைவாயிலில் அடுக்கலாம். மூவர்ணத்தில் ரங்கோலி மூலம் கோலம் போட்டு அழகு படுத்தலாம்.



காதியை பயன்படுத்தவும்


காதி தனித்துவமான பண்புகளைக் கொண்ட ஒரு பல்துறை துணியாகும், இப்போது துடிப்பான மற்றும் கம்பீரமான வண்ணத் தட்டுகளில் கிடைக்கிறது. இது உங்கள் இடத்தில் பல்துறை மற்றும் புத்துணர்ச்சியை சேர்க்கும். அழகான கையால் நெய்யப்பட்ட விரிப்புகள், யோகா பாய்கள், பாரம்பரிய தீம் குஷன் கவர்கள், காதி துணியில் நேர்த்தியான திரைச்சீலைகள் ஆகியவற்றைக் கொண்டு உங்கள் இடத்தை அலங்கரித்து, இந்தக் குடியரசு தினத்தன்று கொண்டாட்டத்தை ஏற்படுத்துங்கள். மேலும் இந்த அலங்காரங்கள் வீட்டிற்கு வருபவர்களை கவரும். அவர்களுக்கும் இன்றைய நாளுக்காக முக்கியத்துவம் இதன் மூலம் கடத்தப்படும். ஆகவே இந்த நாளில் உங்கள் வீட்டை மேலும் எப்படி ஸ்பெஷல் ஆக்கலாம் என்று சிந்தியுங்கள்.