சர்வதேசம் வரை தென்னிந்திய உணவுகள்தான் பெரும்பாலும் காலைச் சிற்றுண்டிக்கு ஏற்ற உணவாகக் கருதப்படுகின்றன என்று சொன்னால் நம்ப முடிகிறதா? சமூக வலைதளங்களில் சமையல் வீடியோ பதிவேற்றும் பலர் இந்திய உணவை குறிப்பாக தென்னிந்திய உணவுகளைதான் தேர்ந்தெடுக்கின்றனர். இட்லி தோசை உப்மா வடை சாம்பார் போன்றவை உலகத்துக்கு தென்னிந்தியா கொடுத்த கொடை எனலாம்.
தோசை தென்னிந்தியாவில் மட்டுமல்ல, நாடு முழுவதும் காலை உணவுக்கான தேர்வாகும். தோசைக்கு நோ சொல்லவே முடியாது. தோசை பாரம்பரியமாக உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியுடன் தயாரிக்கப்படுகிறது. இவற்றை மணிக்கணக்கில் ஊறவைத்து, பின்னர் மாவு பதத்துக்கு அரைக்கப்படுகிறது. ஆனால் நேரமின்மை சிக்கல் யாரை விட்டது? அவர்களுக்காகவே சில நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய தோசை ரெசிபியைக் கண்டுபிடித்துள்ளோம். இது கோதுமை மற்றும் பட்டாணி கொண்டு தயாரிக்கப்படுகிறது.
உடனடி கோதுமை பட்டாணி தோசை எப்படி செய்வது?
முதலில், பட்டாணியைத் தோலுரித்து நன்கு கழுவவும். பச்சை மிளகாய், பூண்டு மற்றும் கொத்தமல்லி இலைகளுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கலவையை கிண்ணத்திற்கு மாற்றவும். அதனுடன் சிறிது கோதுமை, ரவை, அரிசி மாவு மற்றும் உப்பு சேர்க்கவும். மாவை நீர்க்க வைத்திருங்கள், அதற்கு ஏற்ற அளவு தண்ணீர் சேர்க்கவும். பிறகு வழக்கம் போல் தோசைக்கல் நன்கு காய்ந்தது மெல்லியதாக ஊற்றி வார்த்து எடுக்கவும். முறுவலான தோசை ரெடி