Ramadan 2025 wishes: உலகளவிலும், இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக இருக்கும் ரம்ஜானை மகிழ்ச்சியாக கொண்டாடும் தருணத்தில், வாழ்த்துகளை தெரிவித்து அன்பை பரிமாறும் வகையில், உங்களுக்காக ரம்ஜான் வாழ்த்துகள் மற்றும் புகைப்படங்களை தொகுத்து வழங்குகிறோம். இந்த வாழ்த்துகளை உங்களது அன்புக்குரியவர்களுக்கு அனுப்பி அன்பை பரிமாறிக் கொள்ளுங்கள்.
ரமலான் (ரம்ஜான்) என்றால் என்ன?
இஸ்லாமிய மதத்தின் மிக முக்கியமான மற்றும் புனிதமான மாதமாக ரமலான் இருக்கிறது. இது, இஸ்லாமிய நாட்காட்டியின் 9வது மாதமாகும். இது ரமலான் என்றும் ரம்ஜான் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில்தான், இஸ்லாமியர்களின் புனித நூலான குர் ஆன் அருளப்பட்ட மாதமாக கூறப்படுகிறது.இந்த மாதத்தில், இஸ்லாமியர்கள் தங்களது கடமைகளில் ஒன்றாக நோன்பு இருப்பது வழக்கமாகும். இதன் மூலம் பக்தி, பொறுமை, தன்னடக்கம், சமத்துவம், இரக்க மனப்பான்மை ஆகியவற்றை வளர்க்க உதவுகிறது என்று நம்பிக்கை.
இந்த நல்ல நாளை அமைதியுடனும், அன்புடனும் மற்றும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடி சிறப்பிக்கும் வகையில், அன்பை உறவுகளுடன் பரிமாறிக் கொள்ளும் வகையில், உங்களுக்காக ரம்ஜான் வாழ்த்துகள் மற்றும் படங்களை தொகுத்து வழங்குகிறோம். இவை, உங்களது அன்புக்குரியவர்களுக்கு வாட்சப் , ஃபேஸ்புக் , மெசேஜ், இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துகளை அனுப்புவதற்கு பயனுள்ளதாக இருக்கும்.
டாப் 7 ரம்ஜான் வாழ்த்துகள் மற்றும் படங்கள்: ( Ramadan 2025 wishes )
1. அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துகள்

2. ரமலான் வாழ்த்துகள்; இறைவனின் அருள் எப்பொழுதும் உங்களுடன் இருக்கட்டும்
3. இந்த ரம்ஜான், உங்களுக்கு அமைதியையும், நல்லிணக்கத்தையும் மற்றும் ஆசீர்வாதங்களையும் கொண்டுவரட்டும்.
4.உங்கள் இல்லங்கள் மகிழ்ச்சியாலும், அமைதியாலும் நிரம்பட்டும்.
5.உங்கள் வாழ்வில் நன்மைகள் பெருகட்டும், இறைவனின் அருள் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும்.
6. ரம்ஜான் வாழ்த்துகள்; உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்கள் வரட்டும், அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கட்டும்.
7. இறைவன் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி, அன்பு மற்றும் நல்லிணக்கத்தை கொண்டுவரட்டும்
Also Read: நல்லா இருக்கே! கிப்லி படத்தில் ஸ்டாலின், விஜய்...ChatGPT, Grok AI மூலம் எப்படி உருவாக்குவது?