நாக்பூரில் உள்ள டாக்டர் ஹெட்கேவார் ஸ்மிருதி மந்திருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்றுள்ளார். ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நிறுவனர் கேசவ் பல்ராம் ஹெட்கேவார் மற்றும் அதன் இரண்டாவது தலைவர் எம்.எஸ். கோல்வால்கர் ஆகியோரின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார்.

Continues below advertisement


நாக்பூரில் பிரதமர் மோடி:


பிரதமர் மோடியின் பயணத்தின்போது, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், முன்னாள் பொதுச் செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரும் டாக்டர் ஹெட்கேவார் ஸ்மிருதி மந்திருக்கு வந்திருந்தனர்.


நினைவிடத்தில் அமைந்துள்ள ஸ்மிருதி பவனில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளை பிரதமர் மோடி சந்தித்து அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். நினைவிடத்தில் இருந்த விருந்தினர் குறிப்பில், "இந்த நினைவுச்சின்னங்கள் இந்திய கலாச்சாரம், தேசியவாதம் மற்றும் அமைப்பின் விழுமியங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.


ஆர்எஸ்எஸ்காரர்களுக்கு பாராட்டு:


ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டு தூண்களாக கருதப்படும் இவர்களின் நினைவிடம், தேச சேவைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட லட்சக்கணக்கான ஸ்வயம்சேவகர்களுக்கு ஒரு உத்வேகமாக அமைகிறது" என குறிப்பிட்டிருந்தார்.


பின்னர், மாதவ் நேத்ராலயா பிரீமியம் மையத்திற்கு அடிக்கல் நாட்டி பேசிய பிரதமர் மோடி, "மாதவ் நேத்ராலயா என்பது குருஜியின் (எம்.எஸ். கோல்வால்கர்) தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி, பல தசாப்தங்களாக லட்சக்கணக்கான மக்களுக்கு சேவை செய்து வரும் ஒரு நிறுவனம். ஏழைகளுக்குக் கூட சிறந்த சுகாதார வசதிகளை வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகும்.






நமது யோகாவும் ஆயுர்வேதமும் உலகில் புதிய அடையாளத்தைப் பெற்றுள்ளன. கலாச்சார விரிவாக்கம் மற்றும் தேச மனசாட்சியின் விரிவாக்கத்தைப் பொறுத்தே நாட்டின் இருப்பு அமைந்துள்ளது. நமது நாட்டின் வரலாற்றைப் பார்த்தால், தேசத்தின் மனசாட்சியை அழிக்க இதுபோன்ற கொடூரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், யாரும் வெற்றிபெறவில்லை. ஏனெனில் கடினமான காலங்களில் கூட, பல சமூக இயக்கங்கள் இயங்கி வந்திருக்கின்றன. நாட்டின் பல பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தன்னலமின்றி சேவை செய்து வருகின்றனர்" என்றார்.