ஆண் பெண் சமத்துவம், ஆதரவு ஆகியவற்றை முன்னிறுத்தும் இந்த பண்டிகை, 90ஸ் கிட்ஸ்களுக்கு இன்னமும் ஒரு சிறு அச்சத்தை தரும் விஷயமாகதான் உள்ளது. பள்ளி பருவங்களில் நமக்கு பிடித்த பெண்ணோ, ஆணோ நமக்கு ராக்கி கட்டி விடுவார்களோ என்ற பயத்தால் பலர் பள்ளிக்கு விடுப்பு கூட எடுத்திருப்போம். ஆனால் இந்த ரக்ஷா பந்தன் விழாவிற்கு பல ஸ்வாரஸ்யமான கதைகள் உள்ளன.


Abpnadu EXCLUSIVE: பொங்கி எழும் ‘பொன்னி நதி’ வெற்றி.. நான் வைரமுத்துவுக்கு மாற்றா?.. பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் பேட்டி!


இந்த வருடம் எப்போது?


ரக்‌ஷா பந்தன் என்பது ஒவ்வொரு ஆவணி மாதம் பெளர்ணமி தினத்தில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இந்தாண்டு ஒரு மாதம் முன்பே அதாவது ஆடி பெளர்ணமி திதியிலேயே கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 11ம் தேதி (ஆடி 26) வியாழக் கிழமை அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆடி பெளர்ணமி என்பது 11 ஆகஸ்ட் 2022 அன்று வருகிறது. த்ரிக் பஞ்சாங்கப் படி, பெளர்ணமி ஆகஸ்ட் 11, 2022 அன்று காலை 10:38 மணிக்கு தொடங்கி 12ஆம் தேதி காலை 8:02 மணிக்கு முடிவடையும். இருப்பினும், பௌர்ணமியுடன் பத்ராவும் இருப்பதால் பலர் ஆகஸ்ட் 12ம் தேதி ராக்கி கட்ட சரியான நாள் என குறிப்பிடுகின்றனர்.



ராக்கி என்றால் என்ன?


ஆம், இந்த நாளின் சிறப்புகளில் ஒன்று ராக்கி கட்டுவது. இந்த அற்புத தினத்தின் சகோதரிகள் தான் சகோதரன் எனக் கருதுவோர்களுக்கு அவரின் மணிக்கட்டில் ராக்கி எனப்படும் ஒரு மஞ்சள் நூல் கட்டுவது இந்த பண்டிகையில் முக்கிய அம்சமாகும். ராக்கியை ஏற்றுக் கொண்ட அந்த ஆணும், தான் அந்த பெண்ணை சகோதரியாக ஏற்றுக் கொண்டதாக அர்த்தம். அதன் பிறகு, அந்த பெண்ணுக்கு அவர் ஒரு பரிசுப் பொருளைத் தர வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த கயிறு காட்டுவதன் மூலம், குறிப்பிட்ட பெண்ணின் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி, நலனுக்காக எப்போதும் பக்கபலமாக நிற்பேன் என உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. இதற்கு பின்னால் பல கதைகளை கூறுகிறார்கள். அதில் எது சரியான காரணம் என்று தெரியாவிட்டாலும் அவரவர் நம்பிக்கைக்கு இணங்க பல கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன.



திரவுபதி கிருஷ்ணர் கதை


திரேதாயுகத்தில், மகாபாரதப் போருக்கு முன், ஸ்ரீ கிருஷ்ணர், மன்னன் சிசுபாலனுக்கு எதிராக சுதர்சன சக்கரத்தை உயர்த்தினார், அப்போது அவரது கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது, பின்னர் திரௌபதி தனது சேலையை கிழித்து அவரது கையில் கட்டினார், அந்த உதவிக்கு பதிலாக ஸ்ரீ கிருஷ்ணர் எல்லா ஆபத்துகளிலிருந்தும் திரௌபதியை அவரை பாதுகாப்பதாக உறுதியளித்தார். ராக ஹாரன் நேரத்தில் இந்த ராக்கியை கட்டி திரௌபதியை கிருஷ்ணர் பாதுகாத்ததால் ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்படுகிறது.



இந்திரன் - இந்திராணி


ஒரு காலத்தில் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே நடந்த போரில் அசுர சக்திகள் ஆதிக்கம் செலுத்தினர். போரில் அவர்களின் வெற்றி உறுதி என்று கருதப்பட்டது. இந்திரனின் மனைவி இந்திராணி தன் கணவன், அதாவது தேவர்களின் அரசனான இந்திரனைப் பற்றி வருத்தப்பட ஆரம்பித்தாள். எனவே வழிபாட்டின் மூலம், அவள் ஒரு சக்திவாய்ந்த பாதுகாப்பு நூலை உருவாக்கி இந்திரனின் மணிக்கட்டில் கட்டினாள். இதன் பிறகு தேவர்கள் போரில் வெற்றி பெற்றதாகவும், அன்று முதல் ரக்ஷா பந்தன் சவான் பூர்ணிமா தினமாக கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், மனைவி தனது கணவருக்கு ராக்கி கட்டிய ஒரே நிகழ்வு இதுதான். ஆனால் பின்னர் வேத காலத்தில் இந்த மாற்றம் வந்து சகோதர சகோதரிகள் உறவின் விழாவாக மாறியது.



ஹுமாயூன் - கர்ணாவதி


குஜராத்தின் சுல்தான் பகதூர் ஷாவின் படையெடுப்பில் இருந்து தனது ராஜ்ஜியத்தை பாதுகாக்க ஹுமாயூன் பேரரசருக்கு கர்ணாவதி ராக்கியை அனுப்பி அவரைப் பாதுகாக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். ஹுமாயூனும் அவளது ராக்கியை ஏற்றுக்கொண்டு, அவர்கள் அனைவரையும் பாதுகாக்க தன் வீரர்களுடன் சித்தூருக்குப் புறப்பட்டார். ஆனால், ஹுமாயூன் சித்தூரை அடையும் முன், ராணி கர்ணாவதி தற்கொலை செய்து கொண்டார்.



பாலி மன்னன் - லட்சுமி தேவி கதை


மதக் கதைகளின்படி, பாலி மன்னன் அஸ்வமேத யாகம் செய்தபோது, ​​விஷ்ணு குள்ள உருவம் எடுத்து, பாலி மன்னரிடம் மூன்றடி நிலத்தை தானமாகத் தரும்படி கேட்டார். அரசன் மூன்றடி நிலம் தர சம்மதித்தான். மன்னன் ஆம் என்று சொன்னவுடன், விஷ்ணு பகவான் அளவு அதிகரித்து, முழு பூமியையும் மூன்றடியாக அளந்து, மன்னன் பாலிக்கு பாதியைக் கொடுத்தார். பாலி மன்னன் விஷ்ணுவிடம் நான் கடவுளை பார்க்கும் போதெல்லாம் உன்னை மட்டுமே பார்க்கவேண்டும் என்று வரம் கேட்டான். நான் எழுந்திருக்கும் ஒவ்வொரு நொடியும், நான் உன்னைப் பார்க்க விரும்புகிறேன் என்று கேட்டார். பகவான் பாலி மன்னருக்கு இந்த வரத்தை அளித்து மன்னனுடன் வாழத் தொடங்கினார். மகாவிஷ்ணு மன்னருடன் வாழ்ந்ததால் லட்சுமி தேவி கவலையடைந்து முழு கதையையும் நாரத்ஜியிடம் கூறினார். பிறகு நாரத்ஜி லட்சுமி தேவியிடம், பாலி மன்னனை உனது சகோதரனாக்கிக் கொண்டு நீ விஷ்ணுவைக் கேள் என்று கூறினார். நாரத்ஜியின் பேச்சைக் கேட்டு, லட்சுமி தேவி அழுதுகொண்டே பாலி மன்னனிடம் சென்றார், பின்னர் மன்னன் பாலி லட்சுமி தேவியிடம் ஏன் அழுகிறாய் என்று கேட்டார். தனக்கு சகோதரர்கள் யாரும் இல்லை என்று தேவி சொன்னாள். தாயின் வார்த்தைகளைக் கேட்ட பாலி மன்னன், இன்றிலிருந்து நான் உன் சகோதரன் என்றான். பின்னர் லட்சுமி தேவி, பாலி மன்னருக்கு ராக்கி கட்டினார். அப்போதிருந்து, சகோதர சகோதரிகளின் இந்த புனித திருவிழா நன்கு அறியப்பட்டதாக நம்பப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.