ஆவடி கோவர்த்தனகிரி பகுதியில் வசிப்பவர் மூர்த்தி (69) ஒரு மாத காலமாக பக்கவாதம் நோய் ஏற்பட்டு இரண்டு கைகள் செயல் இழந்த நிலையில் வீட்டிலிருந்து மளிகை பொருட்களை வாங்குவதற்காக ஆவடி, பூந்தமல்லி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது பூந்தமல்லியில் இருந்து ஆவடியை நோக்கி சென்ற தடம் எண் 62 அரசு பேருந்து சரவணன் என்பவர் ஓட்டி வந்தார்.  அப்போது மூர்த்தி மீது எதிர்பாராத விதமாக, பேருந்தின் இடதுப்புற முன் சக்கரம் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விபத்தில் உயிரிழந்த தந்தை மூர்த்தி மதுபோதையில் இருந்ததாக போலீசார் கூறியதால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மகன் ஓட்டுநர்களை தாக்க முயற்சி செய்தார். பின்னர் போக்குவரத்து போலீசார் அவரை சமாதானம் செய்து காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.









 





 





 







 

12 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை நில உரிமையாளருக்கு தெரியாமல் போலி ஆவணம் தயார் செய்து விற்பனை செய்த 3 பேரை ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து புழல் சிறையிலடைத்து நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், மேலும் குற்ற வழக்கில் தொடர்புடைய 6 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

போலி  நில ஆவணம் போலி பட்டா என பத்திரப்பதிவுக்கு உதவியாக இருந்த பத்திரபதிவு துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் புருஷோத்தமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

 

சென்னை சூளை பகுதியில் வசித்து வருபவர் ராஜகுமாரி க/பெ பக்கிரி  இவருக்கு அம்பத்தூர் சார் பதிவாளர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட ஒரகடம் பகுதியில் செங்குன்றம்  மெயின் ரோட்டில் 1961 ஆம் ஆண்டின் தொடக்க ஆவணத்தின் படி இவர்களுக்கு சொந்தமான 10,246 சதுரடி இடத்தின்  168/7 சர்வே என்ணை பயன்படுத்தி  போலி பத்திரங்கள் பதிவு செய்த அடைக்கலம் என்பவரின் மகன்களான ஜான் டேவிட் குமார், ஆனந்தராஜ் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் கிரையம் பெற்று அதனை தனியார் பில்டருக்கு விற்பனை செய்த ரபி ஜெயக்குமார், ஆகியோர்களை ஆவடி மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு சிறப்பு தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் .

 



 

ஆவடி காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோரின்  உத்தரவின் பேரிலும் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் கந்தகுமார் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் உதவி ஆணையாளர் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் மத்திய குற்றப்பிரிவு நிலஅபகரிப்பு சிறப்பு தடுப்பு ஆய்வாளர் அவர்கள் தலைமையில் 1 ) ஜான் டேவிட் குமார் வ / 48 , த / பெ அடைக்கலம் அம்பத்தூர் 2 ) ஆனந்தராஜ் வ / 53 , த / பெ அடைக்கலம் அம்பத்தூர் , 3 ) ரபி ஜெயக்குமார் வ / 43 , த / பெ ஸ்டீபன் , திருமல்லைவாயல் ஆகியோர்களை நேற்று  ஆவடி மத்திய குற்றப்பிரிவு நிலஅபகரிப்பு சிறப்பு தடுப்பு ஆய்வாளர் மற்றும் பார்ட்டி சகிதம் கைது செய்து திருவள்ளூர் நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அவர்கள் முன்பு ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

 

மேலும் இதுகுறித்து புகார்தாரரின் வழக்கறிஞர் புருஷோத்தமன் கூறுகையில், 12 கோடி ரூபாய் நிலத்தை போலி பத்திரம் போலி பட்டா என போலியாக தயார் செய்து அதை சுமார் ஏழு பேருக்கு பிரித்து விற்பனை செய்த கும்பல் மீது காவல் ஆணையரகத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலும் இதற்கு துணையாக இருந்த பத்திரப்பதிவு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 6 பேரை ஆவடி காவல் ஆணையராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக வலை வீசி தேடி வருவதாகவும் கூறினார்.