அனைத்து புற்றுநோய்களும், வராமல் தடுக்க முடியும். புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது வாழ்வியல் முறை மாற்றம் தான்.வாழ்வியல் முறை மாற்றம் கொண்டு வருவதன் மூலம், மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.



  • ஆரோக்கியமான உடல் எடை - உங்கள் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இருப்பது அவசியம். உடல் எடை அதிகமாவது, புற்றுநோய் வருவதற்கு காரணமாக இருக்கிறது. குறிப்பாக மாதவிடாய் சுழற்சி நிற்கும் நேரங்களில் அதிக உடல் எடையுடன் இருப்பதும், ஹார்மோன் மாற்றங்களும் மார்பக புற்றுநோய் வருவதற்கு காரணமாக இருக்கிறது. அளவான உடல் எடையுடன் இருப்பது அவசியம்.





  • உடற்பயிற்சி - நீண்டநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். தினம் 30 நிமிடங்கள் முதல் 1 மணிநேரம் வரை உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உடல் எடையுடன் வைக்கும். மேலும் உடற்பயிற்சி செய்வதால் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.





  • ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுங்கள் - காய்கள் மற்றும் பழங்களை எடுத்து கொள்ளுங்கள். இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும். இனிப்புகள் மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது, உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும்.





  • புகைபிடிக்காதீர்கள் - புகைபிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் மட்டுமில்லாமல், இதய நோய்கள், பக்கவாதம், மற்றும் 15 வகையான புற்றுநோய் வரும். அதனால் புகைபிடிக்காதீர்கள்





  • தாய்ப்பால் ஊட்டுங்கள் - குழந்தை பிறந்து ஒரு வருடம்வரை தாய் பால் ஊட்டுங்கள். இது குழந்தை வளர்ச்சிக்கும், தாயின் ஆரோக்கியத்திற்கும் உதவியாக இருக்கும். தாய் பால் ஊட்டுவது மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும்.





  • கருத்தடை மாத்திரைகளை உபயோகிக்காதீர்கள் - 35 வயதுக்கு மேல் கருத்தடை மாத்திரைகளை உபயோகிக்க வேண்டாம். கருத்தடை மாத்திரைகள் உதவியாகவும் இருக்கும். அதே நேரத்தில் அதற்கான பிரச்சனைகளும் இருக்கிறது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் வரும். அதனால் கருத்தடை மாத்திரைகளை தவிர்த்து வேறு கருத்தடை சாதனங்களை பயன்படுத்தி கொள்ளுங்கள்





  • மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள் - வருடத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள், சுய மார்பக பரிசோதனை மற்றும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இது மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும். அறிகுறிகள் இருந்தால் ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்த முடியும்.