உலக மக்கள்தொகையில் பாதி பேர் பச்சை குத்துவது ஹிப்ஸ்டர் அல்லது கட்டுப்பாடுகளை மீறக்கூடிய வாழ்க்கை முறையை விரும்புபவர்கள் மட்டுமே செய்யக் கூடியது என்று நம்புகிறார்கள். ஆனால், பச்சை குத்துதல் இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள நாடுகளின் பல கலாச்சாரங்களின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
பச்சை குத்துதல் பெரும்பாலும் ஒருவரின் சொந்த எண்ணங்களை பிரதிபலிக்கும் ஒரு ஊடகமாக இருக்கலாம், வாழ்க்கையில் அந்த குறிப்பிட்ட தருணத்தில் ஒருவர் சரியாக என்ன உணர்கிறார் என்பதை டாட்டு வெளிப்படுத்துகிறது. மேலும் பல ஆண்டுகளுக்குப் பிறகும் அவற்றைப் பார்ப்பது ஒரு வித்தியாசமான உணர்வாக இருக்கும். டாட்டூக்கள் தனிநபரின் ஆளுமையை பிரதிபலிப்பவை.
டாட்டூ குத்துவதில் ஆர்வமுள்ள ஒரு நபர் கூறுகையில்,"பச்சை குத்திக்கொள்வது பிறருக்கு நாம் தரும் பரிசாக இருக்கலாம், நான் பச்சை குத்திக்கொள்வதில் ஒருபோதும் வருந்தவில்லை, ஏனென்றால் நாம் வாழ்வில் தவறுகள் நேரும்போது அவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அவை தருகின்றன” என்கிறார்.
ஒருமுறை நீங்கள் டாட்டூ குத்தத் தொடங்கினால், தொடர்ச்சியாக டாட்டூ போட்டுக்கொள்ளத் தோன்றும் என்று அவர் கூறுகிறார், டாட்டூவின் எளிமைத் தன்மை வழியாக ஒரு தனிநபரின் அழகியல் வெளிப்படுகிறது.
லிசார்ட்ஸ் ஸ்கின் டாட்டூஸின் என்னும் டாட்டூ நிறுவனத்தின் உரிமையாளர் கூறுகையில், “எனது டாட்டூக்கள் நான் கடந்து வந்த ஆண்களின் ஒரு பகுதியாகும். அவை என்னை கணிவானவராக வைத்திருக்கிறது.நல்லது கெட்டது என நான் கடந்துவந்த பாதையை அவை நினைவுபடுத்துகின்றன" என்கிறார்.
டாட்டூ என்பது ஒரு அழகியல் உணர்வு. பலர் அதனால் ஈர்க்கப்பட்டாலும் எல்லோரும் டாட்டூ குத்திக்கொள்ள மாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் பலருக்கு உடலில் டாட்டூ இருப்பது அருவருப்பான விஷயம்.
பச்சை குத்துவதைச் சுற்றி நிறைய தவறான கருத்துக்கள் உள்ளன. பச்சைகுத்தினால் புற்றுநோய் வரும் என்பது போன்ற கருத்துகளும் நிலவுகின்றன.
டாக்டர் அட்ரிஜா ரஹ்மான் முகர்ஜி கூறுகையில், "பச்சை குத்திய பிறகு புற்றுநோய் வரலாம் என்பது உண்மையல்ல, ஏனென்றால் புற்றுநோய் பரவும் நோய் அல்ல என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். இருப்பினும், இரத்தத்தால் பரவும் நோய்த்தொற்றுகள் குறித்து மக்கள் கவனமாக இருக்க வேண்டும். டாட்டூ குத்துவதற்கு முன்பு அதற்கான ஊசிகளை பரிசோதித்துக்கொள்ள வேண்டும்" என்கிறார் அவர்.
டாட்டூ குத்துவதற்கு எப்போதும் பலரால் அறியப்பட்ட கடைகளைத் தேர்ந்தெடுங்கள். அந்தக் கடைகளில் புதிய ஊசிகளைதான் உபயோகிக்கிறார்களா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.
பச்சை குத்துவது தொடர்பான மற்றொரு புரிதல் என்னவென்றால், அது உங்கள் சகிப்புத்தன்மையையும் சக்தியையும் அதிகரிக்கும் என்பது. உலகெங்கிலும் உள்ள பல பழங்குடி சமூகங்கள் இதை நம்புகின்றன, மேலும் பச்சை குத்துதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
மற்றபடி பச்சைகுத்திக் கொண்டால் ரத்ததானம் செய்யமுடியாது என்கிற கதை ஒருபக்கம் உண்டு. அது முற்றிலும் தவறானது. பல மருத்துவர்கள் ரத்ததானம் செய்வதற்கு பச்சைகுத்துதல் தடையாக இருக்காது என்றே கூறுகிறார்கள்.
பச்சைகுத்துதலை விட அது முடிந்தபிறகான காலகட்டத்தில் அதனைப் பராமரிப்பது கொஞ்சம் சிக்கலான விஷயம்தான். உங்கள் டாட்டூ ஆர்டிஸ்ட் சொல்படி அதனைப் பராமரிப்பது அறிவுறுத்தப்படுகிறது. டாட்டூ காலப்போக்கில் மங்கிவிடும் என்று நீங்கள் பயந்தால், அது உண்மையல்ல.அது பயன்படுத்தும் மையின் தரத்தைப் பொறுத்து நிறம் மாறலாம்.
டாட்டூ ஆர்டிஸ்ட்கள் பெரும்பாலும் பெயரை பச்சை குத்துவதை விரும்புவதில்லை. இருப்பினும் டாட்டூவை எத்தனை வருடங்கள் கழித்து வேண்டுமானாலும் நீக்கலாம். அல்லது அதன்மீது வேறு ஒரு டாட்டூவை வரையலாம்.