இயற்கை படத்தில் ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்தவர் குட்டி ராதிகா. தன்னுடைய இயல்பான நடிப்பாலும் ஒருவித குழந்தைத்தனத்தாலும் அப்படத்துக்கு தேவையான நடிப்பை வெளியிட்டிருப்பார். ஆனால் அதன்பிறகு ஆளே காணாமல் போனார். கன்னட சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தார் குட்டி ராதிகா. கன்னட மொழியில்தான் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கினார். அப்போது அவர் 9ம் வகுப்புதான் படித்துக்கொண்டிருந்தார். அதன்பின்னர் பல முன்னணி நாயகர்களுடனும் அவர் நடித்தார். பல வெற்றிப்படங்களையும் கொடுத்தார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை ரதன் குமார் என்பவரை முதலில் மணந்தார் ராதிகா. அவர் மாரடைப்பில் காலமானார். பின்னர் 2010ம் ஆண்டு கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஷாமிகா என்ற மகளும் உள்ளனர்.

Continues below advertisement

Continues below advertisement

தற்போது சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் அவ்வப்போது அவர் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் தற்போது ராதிகா டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நடன பயிற்சியில் பாடல் ஒன்றுக்கு மிக வேகமாக குத்தாட்டம் போடும் குட்டி ராதிகா கடைசி ஸ்பெட்ட்பில் வழுக்கி விழுகிறார். அந்த வீடியோவில் பாடல் ஓட ஓட டான்ஸ் மாஸ்டருக்கு போட்டியாக ராதிகாவும் படுவேகமாக டான்ஸ் ஆடுகிறார். மிகச்சரியாக ஆடிக்கொண்டிருந்த ராதிகா கடைசி ஸ்டெப்பில் வழுக்கி விழுகிறார். இதில் ராதிகாவுக்கு பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடனம் ஆடும்போது கவனம் தேவை என ரசிகர்கள் பலரும் கமெண்டு செய்துள்ளனர். இன்னும் சிலர் இவ்வளவு வேகமான நடனமா என ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.