நாள்: 2.08.2022
நல்ல நேரம் :
காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி
மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை
இரவு 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
இராகு :
மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
குளிகை :
மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
எமகண்டம் :
காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை
சூலம் - வடக்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே,
இந்தநாள் உங்களுக்கு ஓய்வு கிட்டும். கடந்த சில நாட்களாக பணி அழுத்தம், குடும்ப விவகாரம் தொடர்ந்து அலைச்சல் இருந்து வந்த நிலையில் இன்று போதியளவு நேரம் ஓய்வு எடுக்க கிடைக்கும். சுபகாரியங்கள் சுமூகமாக முடியும். குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவார்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே,
இந்த நாள் வீண் குழப்பம் மனதில் ஏற்படும். சிவபெருமானை வணங்கி சிறப்பு காணலாம். தேவையற்ற காரியங்களில் தலையிடக்கூடாது. குடும்பத்திலும், பணியிடத்திலும் அனுசரித்துச் செல்வது நல்லது. அடுத்தவர் விவகாரத்தில் கூடுதல் கவனம் தேவை.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே,
மிதுன ராசியினருக்கு இந்த நாள் நல்ல நாளாக அமையும். நீண்ட நாள் உடலில் நீடித்து வந்த உபாதைகள் நீங்கும். குடும்பத் தகராறுகள் முற்றுபெறும். ஆஞ்சநேயர் வழிபாடு அவசியம். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நம்பிக்கை அதிகரிக்கும் நாள். பெரியவர்கள் பேச்சு கேட்டு நடப்பீர்கள்.
கடகம் :
கடக ராசி நேயர்களே,
கடக ராசியினருக்கு இந்த நாள் வெற்றிகரமான நாள் ஆகும். இந்த நாள் நீண்ட நாள் எதிர்பார்த்த வெற்றி கிட்டும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பெரியவர்களிடம் ஆலோசனை பெறுவீர்கள். விநாகயப் பெருமானை வணங்கினால் வினை தீரும். குடும்பத்தில் மங்கல காரியம் நடக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே,
இந்த நாள் உங்களுக்கு சுகமான நாள் ஆகும். பெற்றோர்கள் பிள்ளைகள் இடையே இருந்த மனக்கசப்பு அகலும். குடும்பச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். கவலைகள் தீரும். பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். விளையாட்டு வீரர்களுக்கு அம்சமான நாள் ஆகும். தொலைபேசி வழித்தகவலால் ஆதாயம் கிடைக்கும்.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே,
இந்த நாள் உங்களுக்கு புதிய நட்பு கிட்டும். ஆரோக்கியமான. ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் மேலோங்கும். குடும்ப சுமைகள் குறையும். காசி விஸ்வநாதர் வழிபாடு மனதிற்கு நிம்மதி தரும். உங்கள் அருமை அறிந்து மனதிற்கு பிடித்தவர்கள் செயல்படுவார்கள்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே,
இந்த நாள் உங்களுக்கு மனதிற்கு அமைதி கிட்டும். நீண்ட தூரப் பயணம் மேற்கொள்வீர்கள். பிடித்தவருடான சந்திப்பு நிகழும். கணவன் மனைவி இடையே நீடித்து வந்த பிரச்சினை தீரும். குழந்தைகள் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை தேவை. பி.எப். பணம் கைக்கு வரும்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே,
இந்த நாள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். அடுத்தவர் பணத்திற்கு உத்தரவாதம் தரக்கூடாது. கடன் வழங்குவதை ஒத்திவைப்பது நல்லது. மனைவி பேச்சைக் கேட்டு செயல்பட வே்ண்டும். குடும்ப பெண்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே,
இந்த நாள் புதிய முயற்சிகள் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த சிக்கல் சுமூகமாக முடிவுக்கு வரும். மங்கல பேச்சுக்கள் உண்டாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். கவலைகள் தீரும். நீண்ட தூரப் பயணம் மேற்கொள்வீர்கள்.
மகரம் :
மகர ராசி நேயர்களே,
இந்த நாள் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். திறமைகள் வெளிப்படும் நாள். வீண் தகராறில் ஈடுபடுபவர்களிடம் விலகிச்செல்வது நல்லது. குடும்ப பாரங்கள் குறையும். சகோதர வழி நன்மைகள் ஏற்படும். பிடித்தவர்களுடன் நேரம் செலவிடுவீர்கள்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே,
எதிர்பார்த்த சில காரியங்கள் நிறைவேறும். மனதிற்கு விரும்பியவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். நிர்வாக ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உழைப்பு வெளிப்படும் நாள்.
மீனம்:
மீன ராசி நேயர்களே,
சிறு மற்றும் குறுந்தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். செய்கின்ற முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். கலை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.