உங்கள் செல்லப்பிராணிகளுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கனும்னு நினைப்பவரா நீங்கள்? அப்படியெனில், பழங்களை செல்லப்பிராணிகளின் டயட்டில் சேர்க்கலாம். பழங்களில் ஃபைர் மற்றும் ஆண்டி-ஆஸிடன்ட்ஸ் அதிகளவு இருப்பதால் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளின் உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும் என்கிறார்கள் கால்நடை மருத்துவர்கள். 


இன்றைக்கு சந்தையில் செல்லப்பிராணிகளுக்காக பிரத்யேகமாக உணவு வகைகள் கிடைக்கின்றன. ஆனால், அவற்றில் சேர்க்கப்படும் இரசாயனங்களால் நாளடைவில் அவற்றிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பழங்களை கடித்துச் சாப்பிடுவதால் அவைகளுக்கும் சுவைத்துச் சாப்பிட்ட திருப்தி கிடைக்கும் என்கின்றனர். 




நாய் மற்றும் பூனைகளுக்கு அதிக ரசாயனம் இல்லாத வீட்டிலேயே தயாரிக்கும் உணவுகளை டயட்டில் சேர்ப்பதுதான் செல்லப்பிராணிகளுக்கு நல்லது. 


பழங்கள் நல்லது என்பதற்காக நிறைய கொடுக்கக் கூடாது. செல்லப்பிராணிகளான நாய், பூனை மற்றும் பச்சைக் கிளிகளுக்கு அதிகளவில் பழங்கள் கொடுக்கக் கூடாது. ஏனெனில், பழங்களில் அதிகளவு சர்க்கரை இருப்பதால், அளவோடு அளிக்க வேண்டும். 


நாய் மற்றும் பூனைகளுக்கு அவகேடோ, செர்ரீ வகை பழங்கள், திராட்ச்சை, தக்காளி உள்ளிட்டவைகளை கொடுக்கக் கூடாது. இதைச் சாப்பிடுவதால் உங்கள் செல்லப்பிராணிகளின் உயிர் பறிபோகும் அபாயம் இருப்பதை நினைவில் வைத்திருங்கள். பச்சைக்கிளிகள் அனைத்து வகையான பழங்களையும் சாப்பிடும். 




ஆப்பிள்:


ஆப்பிள் செல்லப்பிராணிகளின் ஆரோக்கிய டயட்டில் இடம்பெற வேண்டிய முதன்மையான பழங்களில் ஒன்று. ஆப்பிளில் உள்ள் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ, பொட்டாசியம் உள்ளிட்டவை செல்லப்பிராணிகளில் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. ஆப்பிளை விதைகள் நீக்கி, சிறிய துண்டுகளால் நறுக்கிக் கொடுக்கலாம். ஆப்பிள் விதைகள் செல்லப்பிராணிகளின் உடன் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. 


Bananas: 


செல்லப்பிராணிகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான பொட்டாசியம், கார்போ-ஹைட்ரேட்ஸ், ஃபைர் ஆகியவை வாழைப்பழத்தில் நிறைந்திருக்கிறது. வாரத்தில் இரண்டு முறை குறைந்த அளவில் வாழைப்பழத்தை கொடுக்கலாம்.



Watermelon:

 

தர்பூசணியில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, வைட்டமின் சி மற்றும் தியாமின் உள்ளிட்ட சத்துக்கள் அதிகமாக உள்ளன. தர்பூசணியில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு செல்லப்பிராணிகளுக்கு கொடுக்க வேண்டும். 



 

Strawberries: 


ஸ்டாரபெர்ரியில் வைட்டமின் சி, ஃபைர் மற்றும் ஆண்டி-ஆஸிடண்ட் அதிமாக இருக்கிறது. இது செல்லப்பிராணிகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும். இதில் அதிகளவு சர்க்கரை இருப்பதால், செல்லப்பிராணிகளுக்கு அளவோடு கொடுக்க வேண்டும். இயற்கை சர்க்கரை என்றாலும் செல்லப்பிராணிகளுக்கு அது உகந்தது அல்ல. 


Blueberries: 


ப்ளூபெரீஸ் நாய்களுக்கு ரொம்பவே பிடித்த உணவு. மேலும், இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கிறது. டயட்டில் ப்ளூபெரீஸ் சேர்பதால் செல்லப்பிராணிகளிடையே மாரடைப்பு ஏற்படுவது, கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.


கவனிக்க: 


 செல்லப்பிராணிகளுக்கு பழங்கள் நல்லதுதான் என்றாலும் அளவோடு கொடுப்பதுதான் நல்லது.