சமையல் கலையை விரும்பி செய்பவர்களுக்கும் வெங்காயம் வெட்ட வேண்டும் என்றால் அழுகைதான் வரும். வெங்காயம் நறுக்குவது என்பது பொதுவாக அனைவராலும் விரும்பப்படுவதில்லை. ஆனாலும் வெங்காயம் சமையலில் தவிர்க்க முடியாத ஒரு உணவுப் பொருள். வெங்காயம் சேர்த்து சமைக்காத உணவு ருசியாக இருக்காது என்றே சொல்லி விடலாம். இன்றைக்கு வெங்காயம் சமையல் மட்டும் இல்லாமல் பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. தலையில் முடி வளர்வதற்கு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பயன்களும் வெங்காயத்தில் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?
வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பொடுகு தொல்லை இருந்தால் வெங்காய சாறை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு காணாமல் போய்விடும். இப்படி வெங்காயத்தின் மருத்துவ நலன்களின் பட்டியல் நீண்டது. அந்தவகையில் வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்து கொள்வதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட் தான் இதற்கு காரணம்.
இரத்தம் சுத்தமாகும்:
வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட்டானது, இரத்த நாளங்களைச் சுத்தப்படுத்துகிறது.
பாக்டீரியாக்களை அழிக்கும்:
வெங்காயத்தில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரஸ் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே இவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது.
பாத ஆரோக்கியம்:
தினமும் பாதங்களில் வெங்காயத்தை வைத்து சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கினால், பாதங்களில் இருந்து வீசும் துர்நாற்றம் போய்விடும். பாதங்கள் ஆரோக்கியத்துடன் பாதுகாக்கப்படும்.
சளி, காய்ச்சல் நீங்கும்:
சளி, காய்ச்சல் போன்றவற்றால் அவஸ்தைப்படுபவர்கள், வெங்காயத்தை இரவில் படுக்கும் போது உள்ளங்கால்களில் வைத்து சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கினால் காய்ச்சல் குணமாகும்.
எப்படி பயன்படுத்துவது:
வெங்காயத்தை இரண்டாக வெட்டி, அதை பாதத்தில் வைத்து சாக்ஸ் அணிந்து கொள்ள வேண்டும். இரவு முழுவதும் தூங்கி மறுநாள் காலை வரை அப்படியே விட்டுவிடுங்கள். இதே போன்று அடிக்கடி செய்து வந்தால் நன்மை தரும்.
இதற்கு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட வெங்காயத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், அழுகிய அல்லது ரசாயனம் ஊட்டப்பட்ட வெங்காயங்களைத் தவிர்ப்பது நல்லது.
நம்மில் பெரும்பாலானோர் பாதங்களின் ஆரோக்கியத்தை பெரிதாக கவனிக்க தவறிவிடுவோம். தலைமுடி, முகம், கழுத்து போன்றவைகளைப் பராமரிக்க கொடுக்கப்படும் முக்கியத்துவம் பாதங்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும். நம் பாதங்களில் 7000 த்திற்கும் மேற்பட்ட நரம்புகள் இருக்கின்றன. இவை நேரடியாக உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இனி, உங்களுடைய பாதங்கள் நலமா என்பதை அடிக்கடி கவனித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.