கேரளாவுக்கு என்று தனிச்சிறப்பான  உணவு பழக்க வழக்கம் இருக்கிறது.
கேரளாவில் மட்டும் கிடைக்கக்கூடிய சில உணவுகளும் இருக்கிறது. ஆகையால் கடவுளின் தேசமான கேரளாவுக்கு நீங்கள் சென்றால், அங்கே இருக்கும் உணவுகளை, சுவைக்காமல் இருந்து விடாதீர்கள்.


ஓணம்:


பத்து நாட்கள் மேல் கொண்டாடப்படும் கேரளாவின் ஆகப்பெரிய திருவிழா  ஓணம் பண்டிகையாகும்.இந்த திருவிழாவானது,அறுவடை காலத்தின் தொடக்கத்தை பறை சாற்றுகிறது. மேலும் மன்னன் மகாபலி சக்கரவர்த்தியின்  மேன்மையையும், கடவுள் விஷ்ணுவின் வாமன அவதாரத்தின்  தோற்றத்தையும்,குறிக்கும் வகையில், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பண்டிகை, இந்த ஓணம் திருவிழாவாகும். இந்த ஓணம் பண்டிகை  கேரள மக்களால் வெகு விமர்சையாக, கொண்டாடப்படுகிறது. இந்த திருநாள்,மகாபலி சக்கரவர்த்தியை, தங்கள் இல்லங்களுக்கு வரவேற்பதோடு,அவருக்கான மிகப்பெரிய,"சத்யா" என்று சொல்லப்படும் 26க்கும் மேற்பட்ட உணவுகளை தயார் செய்து, படைப்பதிலும் சிறப்படைகிறது.


இந்த ஆண்டு செப்டம்பர் 8 வியாழன் அன்று திருவோணம் என்று சொல்லப்படுகின்ற,ஓணம் பண்டிகை  கொண்டாடப்படுகிறது.நீங்கள் எதிர்பாராத விதமாக இத்தகைய ஓணம் கொண்டாடும் சூழ்நிலையில் கேரளா செல்லும் சமயத்தில், தவறவிடக்கூடாத நிறைய விஷயங்கள் உள்ளன. இதில் முக்கியமானது,சத்யா என்று சொல்லப்படக்கூடிய 26 வகைகளுக்கு மேலான உணவை நீங்கள் கண்டிப்பாக சுவைக்காமல் விட்டு விடக்கூடாது. கேரளா முழுமைக்கும் கிடைக்கும் பாரம்பரிய உணவுகளை அன்றைய தினம் ஒரே வேளையில், ஒரே இடத்தில், நீங்கள் சுவைத்து மகிழலாம்.


கேரளாவில் இத்தகைய உணவுகளை நீங்கள் சுவைக்கும் தருணத்தில், அங்கு மிகவும் பிரபலமான ஓணம் உணவுகளை உங்களுக்காக அறிமுகப்படுத்துகிறோம்.


1.பால் பாயசம்


அரிசியை 30 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் பாலில் மென்மையான பதம் வரும் வரை வேக வைக்கவும். இதில் சர்க்கரையுடன்,ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.இப்போது சூடான நெய்யுடன் ஒரு பாத்திரத்தில் முந்திரி பருப்புகளை சேர்க்கவும். முந்திரி பொன்னிறமானதும் திராட்சையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.அரிசி கலவையை அதில் ஊற்றவும், இப்பொழுது மிகவும் மென்மையான அரிசி பாயாசம் தயாராக இருக்கும். இங்கு உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல் தேங்காய் பால் அல்லது மாட்டின் பாலை பயன்படுத்தலாம்.



2. ரசம் 
புளியை ஊறவைத்து, அதை நன்றாக கரைத்துக் கொள்ளவும். தக்காளியை சிறுக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தட்டி நசுக்கி வைத்துக் கொள்ளவும். இதனிடையே பருப்புடன் தக்காளியை வேகவைக்கவும்.
எண்ணெயைச் சூடாக்கிய பின் அதில் கடுகு போட்டு தாளிக்கவும்.பிறகு அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை மற்றும் நசுக்கிய பூண்டு சேர்க்கவும். தேவையான கலவை பொறுத்து பருப்புடன் தண்ணீரை கலக்கவும்.புளியை நன்கு கலந்து,அதனுடன் ரசமபொடி சேர்க்கவும்.
இறுதியாக, குறைந்த தீயில் ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.



3. கலன் கேரளா கறி


மோருடன் வாழைப்பழத்தை கலந்து வேக வைக்கவும்.அப்பொழுது வாழைப்பழம் மென்மையாக மாறும். அதில் மஞ்சள் தூளை சேர்க்கவும். இதன் பின் அதில் தேங்காய் துருவல் உப்பு சேர்த்து வதக்கவும்.வேறு ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை சூடாக்கி,அதில் கடுகு கருவேப்பிலையை சேர்த்து, ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும், வாழைப்பழ கலவையை தாளிக்க பொருட்களுடன் இட்டு நன்றாக கலந்து,சிறிது வதக்கி எடுத்தால், கலன் கேரளா கறி சுவைப்பதற்கு தயாராகிவிடும். 



4.கடலை கறி 


கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.அதில் துருவிய தேங்காய், சிவப்பு மிளகாய், கொத்தமல்லி விதைகள், கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைச் சேர்த்து, பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.வதக்கிய பொருட்களை நன்றாக அரைக்கவும். முதல் நாள் நன்கு ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலையை,வேக வைத்து  தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும்  இதன் பின்னர் பின், நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் அரைத்த பொருட்கள் போன்ற மசாலாக்களை சேர்க்கவும். அவற்றை நன்கு சமைக்கவும்.கடைசியாக அதில் வேகவைத்த கொண்டைக்கடலவையின், தண்ணீரை சேர்த்து வேக விடவும்.


5.தேங்காய் சோறு


ஒரு கனமான பாத்திரத்தை எடுத்து அதில் எண்ணெயை சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும்,கடுகு போடவும். வெடிக்கும் சத்தம் வர ஆரம்பித்ததும், சீரகம், உளுத்தம் பருப்பு  சேர்க்கவும். அது பொன்னிறமாக மாறியதும், முந்திரி பருப்பை சேர்த்து, முந்திரி பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதில் உங்கள் சுவைக்கு ஏற்ப மசாலா, தேங்காய் பால், தேங்காய் துருவல், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் அதிக தீயில் கிளறவும். ஏற்கனவே படித்து தயாராக இருக்கும் சாதத்தை மேற்கண்ட கலவையுடன்  கலந்து,ஐந்து நிமிடம் குறைந்த தீயில் கிளறவும். இப்போது மிகவும் சுவையான தேங்காய் சாதம் ரெடி.


இதைப் போலவே திருவோணம் அன்று,சத்யா உணவு பட்டியலில் இருக்கும், 26க்கும் மேற்பட்ட உணவுகளை சுவைக்கும் வாய்ப்பை தவறவிடாமல்,திருமணத்தை சிறப்பாக கொண்டாடுவோம்.