இணையத்தில் ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோ மீண்டும் மீண்டும் வைரலாகிறது. எத்தனை முறை வைரலானாலும் புதுசு போல் நெட்டிசன்களின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்று வருகிறது.


இந்த வீடியோ ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதன்முதலில் ஷேர் ஆனது. அதில் ஏர் இந்தியா விமானத்தினுள் ஒரு பெண் குழந்தை அசவுகரியமாக உணர்ந்து அழுது அடம்பிடிக்கிறது. பெற்றோர் தவிக்க உதவிக்கரம் நீட்டுகிறார் விமான சிப்பந்தி. அந்த நபர் குழந்தையை தோலில் சாய்த்துள்ளது அத்தனை பாந்தமாக இருக்கிறது. அதை குழந்தையின் கண்களில் நம்மால் காண முடிகிறது. அவர் முதுகில் தட்டித்தர குழந்தை அமைதியாக ரொம்பவே தெரிந்த நபரின் மேல் சாய்ந்திருப்பது போல் சவுகரியமாக சாய்ந்துள்ளது.


இந்த வீடியோவைப் பகிர்ந்த இன்ஸ்டா குழந்தையின் தந்தை , ஏர் இந்தியா விமான சிப்பந்தியின் அன்பான கனிவான செயலை வெகுவாகப் பாராட்டுகிறேன். என் மகள் ஃப்ளைட் ஸ்டூவர்ட்டின் தோலில் ரொம்ப சாந்தமாக சந்தோஷமாக படுத்திருப்பதைப் பார்க்க எனகே ஆச்சர்யமாக இருந்தது. அந்த சிப்பந்திக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை டேக் ஓவர் செய்த பின்னர் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று பதிவிட்டுள்ளார். அந்தத் தந்தையின் பெயர் ஜீவன் வெங்கடேஷ். அதுமட்டுமல்ல அந்த இன்ஸ்டா வீடியோவில் சம்பந்தப்பட்ட சிப்பந்தி நீல் மால்கம்மையும் அவர் டேக் செய்துள்ளார்.


3 மாதத்தில் 1,000 புகார்கள்:


மத்திய அரசு நிறுவனமாக இருந்த ஏர் இந்தியாவை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் டாடா நிறுவனம் கைப்பற்றியது. இதனையடுத்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 3 மாதங்களில் 1000 பயணிகளிடமிருந்து டாடா ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது புகார்கள் வரப்பெற்றுள்ளதாக மத்திய அரசு பதிலளித்துள்ளது. இதுகுறித்து, தகவல் தெரிவித்துள்ள மத்திய விமானத் துறை அமைச்சர் விகே சிங் கட்டணத்தை திரும்ப தருவது, விமான பயணச்சீட்டு அதிக முன்பதிவு, மற்றும் பணியாளர்களின் நடத்தை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஏர் இந்தியா மீது பயணிகள் புகார் அளித்துள்ளனர் என்று கூறியுள்ளார். 


இந்நிலையில் தான் இந்த வீடியோ மீண்டும் வைரலாகி வருகிறது.


வைரல் வீடியோவுக்கான லிங்க் கீழே: