நம்முடைய ஊரில் தலைவலி என்றாலே உடனே தலைவலி மாத்திரை எடுத்துக்கொள்வதை ஒரு வழக்கமாகவே வைத்துள்ளோம். டிரிப்டான்ஸ் எனப்படும் மாத்திரை ஒற்றை தலைவலி மற்றும் கிளஸ்டர் தலைவலி சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும் மாத்திரைகளில் ஒன்றாகும். இது உடல் பருமனுக்கு சிகிச்சை அளிப்பதில் உதவியாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பருமனை எலிகள் மீது இந்த ஆய்வு நடத்தப்பட்டதில் தினசரி டிரிப்டான்ஸ் டோஸ் கொடுக்கப்பட்டது. அதன் விளைவாக அவை குறைவான உணவை உண்டு ஒரு மாத காலத்தில் உடல் பருமனை வெகுவாக குறைத்துள்ளது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பசியின்மை மற்றும் எடை இழப்பிற்கு இந்த மாத்திரை மிகவும் பாதுகாப்பானது என ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட இந்த மாத்திரைகள் மீண்டும் தயாரிப்படவிருக்கின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்