உலகின் அமெரிக்க உள்ளிட்ட பலநாடுகளில் இன்று தேசிய ஒயின் தினம் (National Red Wine Day) கொண்டாடப்பட்டு வருகிறது. இது கடவுளிடமிருந்து கிடைத்த அமிர்தம் என்று பைபிளின் படி மேலைநாடுகளில் கூறப்படுகிறது. 


ஒயின் வரலாறு:


இன்று பல்வேறு பகுதிகளிலும் ஒயின் கிடைக்கிறது. பிரான்ஸ், மற்றும் இத்தாலி நாட்டிலிருந்து கிடைத்ததாத கூறப்பட்டுகிறது. ஆனால், ஒயின் மேற்கு ஆசிய நாடானா காகசஸ், சரோஸ் மலைப் பகுதிகள் மற்றும் யுப்ரேட்ஸ் ஆற்றின் அருகில் உள்ள பகுதிகளில் முதன்முதலின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அர்மேனியா மற்றும் ஜார்ஜியா உள்ளிட்ட பகுதிகளில் பண்டைய காலத்தில் ஒயின் தயாரிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கி.பி. 6000 ஆண்டுகளுக்கு முன்பு, ஒயின் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட முறை மிகவும் பழமையானது. அவர்கள் மண் பானைகளை ஒயின் தயாரிக்க பயன்படுத்தியுள்ளனர். 




கிரேக்கர்கள் ஒயின் தயாரிப்பில் சிறந்தவர்களாகவும், அதை விற்பனை செய்வதில் வல்லவர்களாகவும் அறியப்படுகின்றன. ஸ்பெயின் மக்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஒயினை அறிமுகம் செய்தனர். 


ஒயினில் உள்ள நன்மைகள்:


ஒயின் எடுத்து கொள்வதால் உடலுக்கு  நிறைய நன்மைகள் கிடைக்கும். இதை பல பழங்களில் இருந்து தயாரிக்கலாம். இதன், சுவை, மணம் , நிறம்  என ஒவ்வொன்றும் ஒரு பழத்திற்கு தகுந்தாற் போல், மாறுபடும். ஒயின் எடுத்து கொள்வதால் தோலின் நிறம் மாறுபடும். தோலின் ஆரோக்கியம்  மேம்படும். தினமும் ஒயின் குடிப்பதாலும், ஒயின் பேஷியல் செய்வதாலும், சருமத்திற்கு பல பயன்கள் கிடைக்கும்.




 








வெயிலில் நீண்ட நேரம் இருப்பதால், தோலில் நிறம் மாறுபடும்.  ஒயின் பேஷியல் செய்வது உதவியாக இருக்கும். தினம் ஒயின் எடுத்து கொண்டாலும், தோலின் நிறத்தை பாதுகாக்கலாம்.




 ஒயினில் உள்ள antioxidant (ஆன்டிஆக்ஸிடன்ட்)  உடல் எடையை  கட்டுக்குள் வைக்கவும், புற்று நோயையும் தடுக்கவும் உதவுகிறது. 




யூனிவர்சிட்டி ஆஃப் மிலனில் உள்ள ஆல்பர்டோ பெர்டெல்லி என்ற ஆராய்ச்சியாளின் தகவலின் படி, தினமும் குறைந்த அளவில் ஒயின் பருகுவது, இதய நோய் பாதிப்பை குறைக்கும் என்று கூறுகிறது. 


ஒயினை எந்த உணவுடனும் சேர்த்து பருகலாம்.




ரெட் ஒயினில் இருக்கக்கூடிய வேதிப்பொருட்களில், அல்சீமர் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.




2016ம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனையில், ஆறு மாதத்திற்கு, மாலை உணவுடன் ஒரு கிளாஸ் ரெட் ஒயின் பருகியவர்களுக்கு ரத்த அழுத்தத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 



இத்தனை பயன்கள் இருக்கும்  ஒயினை  எவ்வளவு எடுத்து கொள்ளலாம். அது தான் நிறைய நன்மைகள் தருகிறதே என அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ள கூடாது. அமிர்தமாகவே இருந்தாலும் அளவுக்கு  அதிகமானால் அது நஞ்சாக தான் மாறும். அதனால் ஒரு நாளைக்கு 125 மிலி என  இரண்டு வேளைகள் எடுத்து கொள்ளலாம். அதாவது ஒரு நாளைக்கு மொத்தமாக 250 மிலி மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் எடுத்து கொள்வதை விட இரண்டு வேளைகள் எடுத்து கொள்வது நல்லது.