சர்க்கரை வியாதி வந்தால் குணப்படுத்தவே முடியாது. இனிமேல் எதையும் சாப்பிட கூடாது. கண்டிப்பாக இன்சுலின் ஊசி எடுத்து கொள்ள வேண்டும். இனிமேல் அரிசியே சாப்பிட கூடாது. இனிமேல் சர்க்கரை சாப்பிடவே கூடாது. இது போன்ற கதைகள் சொல்லி கொண்டே இருப்பார்கள். இதில் பல கதைகளும் உண்மைகளும் இருக்கிறது.
நீரிழிவு நோய் வந்தால் அரிசி சாப்பிட கூடாது?
அரிசியில் கார்போஹைட்ரெட்அதிகமாக இருப்பதால் , இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதனால் பட்டை தீட்டப்பட்ட அரிசியை குறைத்து கொள்ள வேண்டும். ஆனால் அரிசி எடுத்து கொள்வதால் மட்டும் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதில்லை. அரிசி முழுமையாக தவிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அரிசி உணவு குறைவாக எடுத்து கொண்டாலே போதுமானது.
சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச்சர்க்கரை எடுத்து கொள்ளலாம்?
இது முற்றிலும் தவறு. இனிப்பாக இருக்கும் அனைத்துமே ஆபத்தை விளைவிக்கும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கவே செய்யும். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் வாயில் வைக்கும் போது இனிப்பாக இருப்பது எல்லாமே தவிர்க்க வேண்டும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றத்தல்ல. சர்க்கரைக்கு மாற்று எதுவும் இல்லை. இனிப்பாக இருக்கும் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.
மாத்திரைகளை எடுத்து கொண்டால் எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்?
சர்க்கரை நோய்க்காக நான் தான் சரியாக மாத்திரைகளை எடுத்து கொள்கிறேனே . அதனால் அனைத்து உணவுகளையும் எடுத்து கொள்ளலாம். என நினைக்காதீர்கள். இது முழுக்க தவறான பழக்கம். இனிப்புகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். மேலும், ஆரோக்கியமான உணவுகளை அளவாக எடுத்து கொள்ள வேண்டும்.
பழங்களை தவிர்க்க வேண்டும்?
அதிக இனிப்புடன் இருக்கும் வாழை பழம், மாம்பழம், பலா பழம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். நார்சத்து அதிகம் இருக்கும் ஆப்பிள், கொய்யா பழம், மாதுளை பழம், போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்து கொள்ளலாம். பழங்களை அனைத்தையும் தவிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
நீரிழிவு நோயாளிகள் அதிகம் கொழுப்பு சத்து மிக்க உணவுகளை எடுத்து கொள்ளலாம்?
இது கட்டுக்கதை. கொழுப்பு பல வகைகள் இருக்கிறது. கொழுப்பு அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ளும் போது இரத்தத்தில் கொழுப்புகள் சேர்ந்து இதய நோய்களை ஏற்படுத்தும்.
நீரிழிவு நோய் இருப்பவர்கள் உடல் மெலிந்து விடும்?
சர்க்கரை நோய் வந்தால் கட்டாயம் உடல் இளைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. சிலருக்கு சர்க்கரை நோய் வந்த பிறகு உடல் எடை அதிகமாவதும் நடக்கிறது. அதனால் சிலருக்கு உடல் எடை குறையும். சிலருக்கு உடல் எடை அதிகமாகும். இவை இரண்டுமே ஆரோக்கியமானது இல்லை..