நம் வாழ்க்கையில் அனைவரும் விதவிதமான உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவோம். இதற்காக பெரிய ஹோட்டல்களுக்கு சென்று அதனை ஆர்டர் செய்து சாப்பிடுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அத்தகைய சுவை மிகுந்த உணவினை வீட்டிலேயே எளிமையாக செய்து சாப்பிடலாம் என்றால் அதனை வேண்டாம் என்றா கூறுவோம். வாங்க இன்னைக்கு இட்லியுடன் எல்லாருக்கும் பிடித்தமான ஆட்டுக்கறி சேர்த்து கறி இட்லியை அதுவும் கிராமத்து ஸ்டைல்ல  எப்படி செய்வதுன்னு பார்ப்போம்…   இதனை அனைவரும் வீட்டிலேயே இந்த ரெசிபி டிரை பண்ணலாம்..



முதலில் ஆட்டுக்கறியினை எடுத்துக்கொள்ள வேண்டும். எலும்புகள் எதுவும் இல்லாமல் வெறும் கறியை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.


நீங்கள் சமைக்கும் உணவு சுவை மிகுந்ததாக இருக்க வேண்டும் என்றால், மிக்சியில் அரைக்காமல், அம்மியில் மஞ்சள் மற்றும் மிளகாய் வத்தலை தனித்தனியாக எடுத்து அரைத்துக்கொள்ளவும். பின்னர் ஏற்கனவே நாம் வெட்டி வைத்திருந்த ஆட்டுக்கறியை எண்ணெயெ் ஊற்றி நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். அதில் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் ஊற்றினால் ரெசிபிக்கு கூடுதல் சுவை இருக்கும்.  இதில் நாம் அரைத்து வைத்திருந்த மஞ்சள், இஞ்சி பூண்டு மற்றும் மிளகாய்த்தூளை சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும். இதற்கு தேவையான அளவு உப்புச்சேர்த்துக்கொள்ள வேண்டும்.


இதனை ஒரு 10 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.. தற்போது நாம் இட்லியில் ஸ்டப் செய்வதற்கான மசாலாவை தயாரித்துவிட்டோம்.


 





 


இதனையடுத்து ஒரு பாத்திரத்தில் கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, மிளகு, கருப்பு எள், சீரகம் மற்றும் மிளகாய் வத்தலை எடுத்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் அனைத்தையும் அம்மியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.


தற்போது கறி இட்லிக்குத்தேவையான அனைத்து மசாலாக்களும் தயாராகிவிட்டது. எனவே இதன் பிறகு  நாம் எப்போதும் இட்லி அவிப்பது போல மாவை சிறிதளவு ஊற்றிக்கொள்ள வேண்டும். அதன் மேல் நாம் கறியுடன் மஞ்சள்,மிளகாய் தூள், இஞ்சி சேர்த்து வதக்கி வைத்திருந்த மசாலாவை  வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதற்கு மேல் மேலும் ஒரு கரண்டி மாவினை ஊற்ற வேண்டும். தற்போது இட்லி வெந்தவுடன் அதனை தனியாக பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.


இதன் பிறகு தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி அதில் கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, மிளகு, கருப்பு எள், சீரகம் மற்றும் மிளகாய் வத்தல் சேர்த்து அரைத்த பொடியினை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் நாம் வேக வைத்த இட்லியை தோசைக்கல்லில் வைத்து அதனுடன் மசாலா பொடியினை சேர்த்து நன்றாக ப்ரை பண்ண வேண்டும்.





இப்போது மிகவும் ஜூஸியான, சுவையான கறி இட்லி ரெடியாயிருச்சு. உடலுக்கு ஆரோக்கியமாகவும் அனைவருக்கும் பிடித்தமானதாகவும் நிச்சயம் இந்த கறி இட்லி இருக்கும். இதுவரை நாம் கறி தோசை சாப்பிட்டு இருப்போம். இப்ப வீட்டிலேயே சுலபமாக செய்யும் வகையில் உள்ள இந்த கறி இட்லியை இனிமே கொஞ்சம் ட்ரை பண்ணிப்பார்ப்போம்….