Mother's Day Gift: அன்னையர் தினத்தில் நம் அன்பான அம்மாக்களுக்கு... இப்படியான பரிசுகளை வாங்கி கொடுங்க.!

Mother's Day Gift Ideas 2024: அன்னையர் தினத்தில் நம் அம்மாகளுக்கு எந்த மாதிரியான பரிசுகளை கொடுக்கலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

Continues below advertisement

Mother's Day Gift Ideas 2024: அன்னையர் தினம் என்பது அன்பை வெளிப்படுத்தும் தினம். நம் அம்மாகளின் கௌரவிக்கும் ஒரு இதயப்பூர்வமான கொண்டாட்டமாகும். அன்னையர் தினம் பொதுமாக மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு மே 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. 

Continues below advertisement

நம் தாய்மார்கள் செய்யும் அனைத்து தியாகங்களுக்கும் நன்றி தெரிக்கும் நாளாகவும், தாய்க்கும் குழந்தைகளுக்கும் இடையிலான தனித்துவமான பிணைப்பை கொண்டாடும் நாளாகும். 

இந்தநிலையில், அன்னையர் தினத்தில் நம் அம்மாகளுக்கு எந்த மாதிரியான பரிசுகளை கொடுக்கலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

நகைகள்: 

தற்போதைய தங்கம் விற்கும் விலைக்கு நகை வாங்கி கொடுப்பது என்பது கஷ்டமான விஷயம்தான். ஆனால், விலையின் அளவை விட அன்பின் அளவு சிறந்தது அல்லவா! உங்களால் முடிந்தது குறந்தது 1000 ரூபாய்க்கு ஒரு சின்ன மூக்குத்தியாவது தங்கத்தில் வாங்கி கொடுக்கலாம். அப்படி இல்லையென்றால், வளையல் உள்ளிட்ட சில ஆபரணங்கள் வாங்கி கொடுக்கலாம். 

புத்தகம்: 

புத்தகம் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கக்கூடிய எளிய வகையான ஒன்று. இதன் காரணமாக, உங்கள் அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தும் கையால் எழுதப்பட்ட குறிப்புகள் (டைரி) மற்றும் புத்தங்கள் வாங்கி கொடுக்கலாம். 

சமையல் தொகுப்பு: 

உங்கள் அம்மாக்கு சமையல் பிடிக்கும் என்றால், புகழ்பெற்ற சமையல்காரர் அல்லது உள்ளூர் சமையல் நிபுணரால் எழுதப்பட்ட சமையல் குறிப்புகளை வழங்கலாம். 

உண்டியல்: 

சேமிப்பு என்பது பெண்களுக்கே உண்டான ஒரு பொறுப்பான பழக்கவழக்கங்கள். எனவே, வித்தியாசமான யானை, வீடு போன்ற உண்டியல்களை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்விக்கலாம். 

செடி: 

வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் செடி மற்றும் கொடி வகைகளை வாங்கி கொடுக்கலாம். அது அவர்களுக்கு நிறைவான பரிசாக இருக்கும். 

இதுமட்டுமல்லாமல், அவர்களுக்கு பிடித்த ஏதேனும் ஆடைகள், ஒருநாள் அவுட்டிங், பிடித்த உணவுகளை வாங்கி கொடுப்பது, பியூட்டி பார்லருக்கு அழைத்து செல்வது உள்ளிட்ட சில விஷயங்களும் செய்யலாம். இது நம் அம்மாக்களுக்கு இன்னும் மகிழ்ச்சியை தரலாம். 

Continues below advertisement
Sponsored Links by Taboola