தாயைப் பற்றி ஒரு கவிதை சொல்லுங்களேன் என்று கேட்கப்பட ஒருவர் கவிஞர் சொன்னார் சுவாசிப்பதை எப்படி சிலாகித்துச் சொல்ல முடியும் என்று.


அன்னையர் தினம்:


ஆம் அன்னை என்பவள் சுவாசம் போன்றவள். உண்மையில் அன்னையின் உயிரும் தந்தையின் உயிரும் தான் நம் உயிர். அந்த உயிரை நாம் வளர்ப்பதுபோல் நம்மை வளர்த்த அன்னையையும் போற்றிப் பாதுகாக்க வேண்டாம். எத்தனை நன்றி செலுத்தினாலும் தீராத கடன் அன்னையின் அன்பு. அன்னையரை கொண்டாடத் தனியாக நாள் தேவையில்லை என்றாலும் கூட அதற்கும் ஒரு நாள் இருக்கிறது. அந்த நாள் தான் அன்னையர் தினம்.


மே மாதத்தில் வரும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையில் அன்னையர் தினம் (Mothers Day) கொண்டாடப்படுகிறது. அதன் படி வரும் ஞாயிற்றுக் கிழமை (மே 14)  அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. 


* என் தாய்: அவள் அழகானவள், மென்மையானவள் ஆனால் உள்ளம் உறுதியானவள். வலிமையில் அவள் இரும்பு போன்றவள். நான் வயதான பின்னர் அவளைப் போலவே இருக்க விரும்புகிறேன் - ஜோடி பிகோல்ட்


* அம்மா நான் உன் மகவாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இந்த உலகிலேயே நீ தான் சிறந்த தாய். நான் உனக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அன்னையர் தின வாழ்த்துகள்.


* அம்மா நீங்கள் என்னை உங்கள் கையில் ஏந்தினீர்கள். நீங்கள் எங்களுக்கு அளித்தவை எல்லாமே பொக்கிஷம் தான். நீங்கள் என் மனதில் நிலைத்து இருப்பீர்கள்.  அன்பு முத்தங்கள் அம்மா. அன்னையர் தின வாழ்த்துகள்.


* நீங்கள் உங்கள் அன்னையப் பார்க்கும்போது கலப்பிடமில்லாத அன்பை மட்டுமே பார்க்கிறீர்கள் - மிட்ச் ஆல்போம்.


* அம்மா, நீங்கள் இன்றைய தினம் உங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஓய்வு எடுங்கள். நீங்கள் அதற்கு உரித்தானவர்கள். அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா.


* அம்மா இன்று உங்களை இந்த உலகம் கொண்டாடும். ஆனால் இந்தக் குடும்பத்தில் இன்று நாங்கள் எல்லோரும் உங்களை ஒவ்வொரு நாளும் கொண்டாடுகிறோம். எனக்கு நீங்கள் ஒரு சிறந்த அம்மாவாக இருப்பதற்கு நன்றி தாயே. அன்னையர் தின வாழ்த்துகள்.


* என் தாய் ஒரு நடமாடும் அற்புதம் - லியானார்டோ டிகேப்ரியோ


* அம்மா, மம்மா, மா எப்படி அழைத்தாலும் நீங்கள் ஒரு சூப்பர் வுமன் அம்மா. அன்னையர் தின வாழ்த்துகள். என் வாழ்வின் சிறந்த நபருக்கு அன்னையர் தின வாழ்த்துகள்.


* புயல் நிறைந்த சமுத்திரம் போன்ற என் வாழ்க்கையில் நீங்கள் தான் அம்மா ஒரு நங்கூரம். அம்மா நான் உங்களை வெகுவாக நேசிக்கிறேன். நீங்கள் இல்லாமல் நான் என்னவாகியிருப்பேன் என்றே எனக்குத் தெரியாது அம்மா. அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா.


* எப்படியிருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், சகிப்புத்தன்மை, துணிவு, இரக்கம் இவை எல்லாவற்றையும் நீங்கள் தான் அம்மா எனக்குக் கற்றுக் கொடுத்தீர்கள். ஏன் என்றால் இவையெல்லாம் சேர்ந்ததுதான் நீங்கள் - லேடி காகா


*  அம்மா எப்போதும் எனது வலப்பக்கம் நீங்கள் துணையாக நிற்கிறீர்கள். நான் உங்களை நேசிக்கிறேன் அம்மா. நீங்கள் இல்லாவிட்டால் நான் என்ன செய்வேன் என்றுகூட எனக்குத் தெரியவில்லை அம்மா. அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா.


இவை எல்லாம் வெறும் வார்த்தைகள் தான். ஆனால் சற்று உணர்வுப்பூர்வமான வார்த்தைகள். உண்மையில் நம் அன்னைக்கும் தந்தைக்கும் நம் வெறும் வார்த்தைகளால் நன்றி தெரிவித்துவிட முடியாது. முதியோர் இல்லங்கள் உருவாகமல் பார்த்துக் கொள்ள நாம் பங்களிப்போம். அதுவே உண்மையான நன்றிக்கடன்.