கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தமிழகத்திலேயே முதல் முறையாக செயல்பட்டு வரும் தானியங்கி கணினி ஓட்டுனர் தேர்வு தளத்தை போக்குவரத்து ஆணையர் நிர்மல் குமார் ஆய்வு செய்தார்.


 




கரூரை அடுத்த தாந்தோன்றிமலையில் உள்ள கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு போக்குவரத்து ஆணையர் நிர்மல் குமார் இன்று வருகை  தந்தார். அங்கு செயல்படும் தானியங்கி கணினி ஓட்டுநர் தேர்வு தளத்தை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது போக்குவரத்து அலுவலர்கள் உடன் இருந்தனர். தமிழகத்திலேயே முதன் முதலாக செயல்படுத்தப்படும் இந்த தானியங்கி கணினி ஓட்டுநர் தேர்வு தளம் போன்று தமிழகத்தில் 20 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், இதே போன்று செயல்படுத்துவதா அல்லது மேம்படுத்தி செயல்படுத்துவதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டதாக நிர்மல் குமார் தெரிவித்தார். 


 




 


மேலும், லஞ்சத்தை ஒழிப்பதற்காகவே ஆன்லைன் முறையில் பணம் செலுத்தும் நடவடிக்கைகள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் காலிப் பணியிடங்கள் இருப்பது உண்மை தான். அவற்றை நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண