புதிதாக திருமணமானவர்கள் அல்லது விரைவில் திருமணம் செய்துக்கொள்ள போகிறீர்கள் என்றால் சில தவறுகளை செய்யாமல் தவிர்த்து உங்களது வாழ்க்கையை நடத்தினால் எவ்விதப் பிரச்சனையும் இன்றி வாழ முடியும்.


 ஒவ்வொருவரும் singles ஆக இருக்கும் போது ரெம்ப ஜாலியாகவும், ரசித்தும் வாழ்ந்திருப்போம். ஆனால் அதே திருமணமானால் வாழ்க்கையே  போய்விட்டது என்ற வார்த்தையை நாம் அதிகமாக கேட்டிருப்போம். இதுப்போன்ற மனநிலையில் உள்ளவர்களாக நீங்களும்? அப்படின்னா உங்களது புதிய திருமண வாழ்க்கை அல்லது புதிதாக திருமணம் செய்துக்கொள்ளப்போகிறவர்கள் பொதுவாக நடைபெறும் சில தவறுகளை திருத்திக்கொண்டு நல்ல புரிதலோடு வாழ்ந்தால் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் வாழலாம். எனவே புதுமணத் தம்பதிகள் தவிர்க்க வேண்டிய சில பொதுவான தவறுகள் என்ன? என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.


 ஆண் மற்றும் பெண் என யாராக இருந்தாலும் திருமணத்திற்குப் பிறகு தங்களுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப நண்பர்களுடன் பழகுவதற்கு ஒரு எல்லையை நிர்ணயிக்கக்கூடாது. 25 ஆண்டுகள் நெருங்கி பழகியவர்களை திருமணத்திற்கு பிறகு எப்படி மறக்க முடியும்? அதிலும் பெரும்பாலான பெண்களுக்கு இதுவே பெரிய பிரச்சனையாக இருக்கும். எனக்கு பிடிக்காதவர்களுடன் பேசக்கூடாது என கணவர் தெரிவிக்கும் போது தான் பிரச்சனை பெரிதாகிறது. எனவே திருமணத்திற்கு பிறகு கணவராக இருந்தாலும் மனைவியாக இருந்தாலும் அவரவர் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நேரத்தை செலவழிக்கப் பழகுங்கள். இவ்வாறு மேற்கொள்ளும் போது கணவன்- மனைவி ஒருவருக்கொருவர் புரிந்துக்கொள்வதற்கு ஒரு வழியாக அமையும்.





 தவறு செய்தால் மன்னிக்கவும் :  திருமணத்திற்குப் பின்பாக உங்கள் புதிய வாழ்க்கைத் துணை எந்தத் தவறும் செய்யக்கூடாது என்று நினைப்பது நியாயமற்றது. எனவே சின்ன சின்ன தவறுகள் செய்தாலும் அதனை பெரிதுபடுத்தக்கூடாது. லேசாக கண்டித்து அதனை கடந்து செல்வதே புத்திசாலித்தனம். இவ்வாறு செய்தால் ஒருவருக்கொருவர் நல்ல புரிதலோடு வாழமுடியும் என்பதோடு தவறுகளைக் குறைத்துக்கொள்வதற்கும் நல்ல வாய்ப்பாக அமையும்.


அவசியமான விஷயத்திற்கு ஷேரிங் செய்யவும்: காதல் திருமணமோ அல்லது பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணமோ எதுவாக இருந்தாலும் புரிதலோடு வாழவேண்டும். இதோடு சின்ன சின்ன விஷயங்களை ஷேரிங் செய்வது என்பது  ஆரோக்கியமான விஷயம் தான். இதனாலும் சில நேரங்களில் உங்களுக்குப் பிரச்சனை ஏற்படலாம். உதாரணமாக ஒரே பேஸ்டை நீங்கள் ஷேர் செய்து உபயோகிக்கும் போது, சில நேரங்களில் அம்மூடியை  மூட நாம் மறந்திருப்போம். இதனால் சில நேரங்களில் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படும். எனவே முடிந்தவரை பிரச்சனை இல்லாமல் இருப்பதற்காக உங்களுக்கென தனி தனிப் பொருள்களைப் பயன்படுத்தி தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்த்திடுங்கள்.


இதோடு உங்களுக்கு பிடித்தப்படி உங்களது வீடுகளை அலங்கரிக்க நினைப்பீர்கள். ஆனால் திருமண வாழ்வில் நுழைந்த பிறகு உங்களது துணையின் ரசனைக்கு ஏற்பவும் வீட்டை அலங்கரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இவ்வாறு  இதன் மூலம் வேறொரு வீட்டில் இருக்கிறோம் என்ற நினைப்பு ஏற்படாது. மேலும் உங்களை நம்பி வரும் புதிய வாழ்க்ககைத் துணைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.  குறிப்பாக உங்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை முற்றிலும் மறந்துவிடக்கூடாது. மாதத்திற்கு ஒருமுறையாவது  உங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் டூர் செல்லுங்கள். இவ்வாறு செய்யும் கணவன் மற்றும் மனைவியின் குடும்பத்தாருடன் பழகுவதற்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். மேலும் உங்களது மனைவியோ? அல்லது கணவருக்கோ என்ன பிடிக்கும் என்ற விஷயத்தைத் தெரிந்துக்கொள்ள உதவியாக இருக்கும்.