மழை பெய்யும் போது சூடாக பஜ்ஜி போண்டா உள்ளிட்டவற்றை சாப்பிட நாம் எல்லோருமே விரும்புவோம். ஆனால் மழைக்காலங்களில் சர்க்கரை நோயாளிகள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்.  மழைக்காலங்கள் குளிர்ச்சியானதாக இருக்கலாம். ஆனால் இந்த காலத்தில் நோய் தொற்றுகள் உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நீரிழிவு நோய், நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி விடுமாம்.  இதன் காரணமாக, நீரிழிவு நோயாளிகள் தண்ணீரால் பரவும் நோய்கள் தங்களுக்கு வராமல் தடுக்க வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மழைக்காலத்தில் வீட்டில் சமைத்த நோயெதிர்ப்பு சக்தி நிறைந்த ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிட வேண்டும். 


உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், உங்கள் கால்களை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு சிறிய வெட்டு காயம் கூட பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.  உயர் இரத்தச் சர்க்கரையின் காரணமாக இரத்த ஓட்டம் மோசமாகலாம். இதன் விளைவாக உங்கள் பாதத்தில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 


கண்களை கவனித்துக் கொள்ளுங்கள்:
உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், மழைக்காலத்தில் கண் நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புண்டு. கண் நோய்த்தொற்றுகளைத் தவிர்க்க, உங்கள் கைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பதுடன், உங்கள் கண்களைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.


நீரேற்றமாக வைத்துக்கொள்வது முக்கியமானது:
மழைக்காலத்தில் தண்ணீர் கிடைத்தாலும், உங்கள் உடல் எப்போதும் நீரேற்றமாக இருக்காது. இந்தியப் பருவமழைக் காலத்தின் சிறப்பியல்பு வெப்பம் மற்றும் ஈரப்பதம் நீரிழப்புக்கு வழிவகுக்கும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கின்றோமா என்பதை உறுதி செய்ய வேண்டும். தண்ணீருக்கு பதிலாக தேங்காய் நீரையும் குடிக்கலாம்.


வழக்கமான உடற்பயிற்சி:


மழைக்காலங்களில், நீங்கள் அதிக நேரம் தூங்க நேரிடலாம். நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து  உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.  இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும், இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கவும் உதவுகிறது.


ஆரோக்கியமான உணவை உண்ணுங்க:


சர்க்கரை நோயாளிகள் மழைக்காலங்களில் தாங்கள் சாப்பிடும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். நிச்சயம் வீட்டில் சமைத்த உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். இதனால் நீங்கள் சுத்தமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை சாப்பிட முடியும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் உணவுப்பொருட்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். சர்க்கரை நோயாளிகள் இது போன்ற வழிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம்  நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். 


மேலும் படிக்க,


”ஆளுநரை இங்கு இருந்து தூக்கிவிடக்கூடாது என முதல்வரே கூறியிருக்கிறார்” - அமைச்சர் தங்கம் தென்னரசு


https://tamil.abplive.com/news/tamil-nadu/minister-thangam-thennarasu-says-never-mind-the-governor-rnravi-lamentations-never-mind-him-132161/amp