இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் டயட் முறையை கடைபிடிப்பதால் இதய பாதிப்புகள் காரணமாக உயிரிழக்கும் பாதிப்பு 91% வாய்ப்பிருப்பதாக சமீபத்திய  ஆய்வு தெரிவித்துள்ளது. 


அவசர வாழ்க்கை முறை, துரிவு உணவுகளை சாப்பிடுவது உள்ளிட்ட வாழ்வியல் மாற்றங்களால் உடல் எடையை குறைப்பதற்கு இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் முறையை பின்பற்றவது அதிகரித்து வருகிறது என்று சொல்லலாம். அப்படியிருக்கையில், தி ( The American Heart Association) அமெரிக்கன் ஹார்ட் அசோசியேசன் ஆய்வு இதழில் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.


உடல் எடையை குறைக்க பின்பற்றப்படும் டயட், வழிமுறைகளில் இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்  உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஷாங்காய் ஜியாவ் டாங் யூனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசன் (Shanghai Jiao Tong University School of Medicine) - னைச் சேர்ந்த விக்டர் ஷாங் ( Victor Zhong ) என்பவர் தலைமையிலான குழு இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் டயட்டை பின்பற்றும் 20,000 - நபர்களின் செயல்முறைகளை கண்காணித்து ஆய்வு செய்துள்ளனர். 


இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் டய்ட் முறை இதய நோயால் ஏற்படும் மரண அபாயத்துடன் தொடர்புடையது என்று ஆய்வு தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த ஆய்வு அதன் தெளிவற்ற தன்மை காரணமாக மருத்துவர்களிடையே பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.


இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.சிகாகோவில் திங்கட்கிழமை வெளியிடப்பட்ட ஆய்வில், உணவு நேரத்தை ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் வரை கட்டுப்படுத்துவது இதய நோய் பாதிப்புடன் தொடர்புடையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.  தினமும் 12-16 மணி நேர இடைவெளியில் உணவு உட்கொள்பவர்கள், இந்த டயட் முறையை பின்பறாதவர்கள் என இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில், குறிப்பிட்ட இடைவெளி நேரத்தில் உணவு உட்கொள்ளும் நபர்களின் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு இருப்பதாக பதிவாகியுள்ளது. 


ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் human metabolism துறையின் பேராசிரியராக உள்ள Keith Frayn இந்த ஆய்வு குறித்து கூறுகையில், “ குறிப்பிட்ட நேர இடைவேளையில் உணவு உட்கொள்வது கலோரி அதிகமாக எடுத்துகொள்வதை குறைப்பதற்கான வழியாக இருக்கிறது.இந்த ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், கூடுதலாக தகவல்கள் தேவைப்படுகின்றனர். தெளிவான முடிவுகளுக்கு தொடர்ந்த இந்த துறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. தற்போது வெளியாகியுள்ள ஆய்வு சுருக்கமும் பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்காமல் இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார். 


US Centers for Disease Control மற்றும் Prevention's National Health,  Nutrition Examination Survey ஆகியவற்றின் அடிப்படையில் 20 ஆயிரம் நபர்களிடம் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. 2003 முதல் 2019 வரையிலான இறப்புத் தரவுகளுடன் கேள்வித்தாள்களுக்கான பதில்களையும் ஆய்வுக்கு பயன்படுத்தியுள்ளனர். இந்த முறையில் இரண்டு நாட்களுக்கு ஒருவர் என்ன சாப்பிட்டார்கள் என்று நினைவு கூர்ந்து பதிவு செய்வது சாத்தியம் என்றாலும் அதில் தகவல் பிழைகள் இருக்க வாய்புள்ளதாக சில விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.


இதய நோய் அபாயம் இருப்பதாக கண்டறியப்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் 48 வயதுக்குட்பட்ட ஆண்கள். இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் டயட் எவ்வளவு காலம் தொடர்ந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் ஆராய்ச்சியாளர்கள் அதைத் தொடர்ந்தனர் என்று ஜாங் கூறுகிறார்.


இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட நபர்கள் அதிக உடல் எடை கொண்டவ இளையவர்களாக இருப்பார்கள் என்று ஷாங் தெரிவித்துள்ளார். மேலும், கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வு முறையின் வழியே இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் டயட் இருப்பவர்களுக்கும் அவர்களின் இதய ஆரோக்கியத்திற்கு தொடர்பு இருப்பதை கண்டறிந்துள்ளனர். 


இருப்பினும், இந்த ஆய்வு எந்த வயது நபர்களிடம் ஆய்வு மேற்கொண்டது, என்ன உணவு சாப்பிட்டார்கள், எவ்வளவு மணி நேர இடைவெளியில் உணவு சாப்பிட்டார்கள் என எது பற்றியும் தெளிவான தகவல்கள் இல்லை. மேலும், ஆய்வின் முழு தகவலும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், இந்த ஆய்வு வெளியிட்டுள்ள தகவலை முழுவதுமாக நம்ப முடியுமா என மருத்துவர்களும் ஊட்டச்சத்து நிபுணர்களுன் கேள்வி எழுப்பியுள்ளனர். அதோடு, தெளிவான தகவல்கள் கிடைத்தால் மட்டுமே சரியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.