பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளுக்கு நிவாரணம் வேண்டும் என்று நினைத்தால், உணவில் சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பெண்கள் இளம் வளதில் இருந்து அனுபவிக்கும் பிரச்சனைத் தான் மாதவிடாய் வலி. மாதவிடாயின் முதல் நாளில் உங்கள் உடலில் உள்ள புரோஸ்டாக்லாண்டின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் தான் முதல் நாளில் வலி அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. தற்போதுள்ள காலக்கட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகளுக்கு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப் பெற்றுவருகின்றனர் அதிலும் குறிப்பாக பிசிஓடி எனப்படும் பாலிசிஸ்டிக் ஓவேரியன் எண்டோமெட்ரியோசிஸ் பிரச்சனைகளால் பெண்கள் பாதிக்கப்படுவதால் கருத்தரிப்பு பிரச்சனையும் பெண்கள் சந்திக்கின்றனர். பிசிஓடியினால் பெண்கள் பலருக்கு தலைவலி, குமட்டல், ஒற்றைத்தலைவலி, மன அழுத்தம், மாதவிடாய் காலத்தில் அதிக வலி போன்ற உடலில் துணைப்பிரச்சனைகள் ஏற்படுகிறது.
பொதுவாகவே ப்ரீயட்ஸ் காலங்களில் சில பெண்களுக்கு அதிக வயிற்றுவலி ஏற்படும் போது சில மாத்திரைகளை அவர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் அது நிச்சயம் உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், இந்த வயிற்றுவலியை உணவு முறையிலேயே சரி செய்துவிடலாம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். அப்படி என்ன உணவு முறை? எப்படி இதனைப் பயன்படுத்த வேண்டும் என முன்னணி ஊட்டசத்து நிபுணர் ருஜுதா திவேகர் தெரிவித்துள்ள உணவு முறைகளைப்பற்றி கட்டாயம் நாமும் இங்கே தெரிந்துக்கொள்வோம்.
1. ஊற வைத்த திராட்சை: காலையில் தினமும் வெறும் வயிற்றில் ஊறவைத்துள்ள கருப்பு திராட்சை மற்றும் குங்குமப்பூவின் கலவையைச் சாப்பிடும் போது உடலுக்கு ஆரோக்கியத்தைக்கொடுக்கும். இதனால் மாதவிடாய் காலத்தில் ஏற்படுத்தும் வலியைக்குறைக்க உதவுகிறது.
2. உணவில் நெய் சேர்த்துக்கொள்ளலாம்: அதிக புரோட்டீன் நிறைந்த நெய்யை ஒவ்வொரு உணவிலும் சேர்த்துக்கொள்ள வேண்டும். காலை,மதிய மற்றும் இரவு உணவில் சேர்த்துக்கொள்ளும் போது மாதவிடாய் தொடர்பானப் பிரச்சனைகள் மற்றும் குமட்டல் போன்றவை ஏற்படாமல் இருக்கும்.
- மாதவிடாய் காலத்தில் வலியால் அவதிப்படும் நபர்களுக்கு தயிர்சாதம் சிறந்த உணவாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக பருப்பு வகைகளுடன் கூடிய தயிர் சாதத்தை சாப்பிடலாம். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
- நட்ஸ் வகைகள் : பெண்கள் மாதவிடாய் காலத்தில் வலியால் துடிக்கும்போது, கை நிறைய முந்திரி அல்லது வேர்க்கடலையை எடுத்து வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடலாம். நமக்குத் தேவையான புரோட்டீன்கள் நமக்கு கிடைக்கப்பெறும்போது உடலில் வலி மற்றும் சோம்பல்தன்மை இருக்காது. இதேபோன்று பாதாம், பிஸ்தா, வால்நட்ஸ் போன்றவற்றையும் கொஞ்சம் டிரை பண்ணிப் பார்க்கலாம்.
- ராகி : ராகியுடன் செய்யப்படும் தோலை அல்லது ரொட்டியை சாப்பிடலாம். பருப்பு மாவைக்கொண்டு நமக்கு விருப்பமான உணவுகளைத் தயாரித்துச் சாப்பிடலாம்.
இதுபோன்ற சத்தான உணவுகள் நிச்சயம் வலிமிகுந்த மாதவிடாய் நாள்களில் சற்று நமக்குப் பயனுள்ளதாக அமைகிறது. எனவே பெண்கள் வேலை வேலை என்று அழைந்து திரிந்தாலும் சற்று உங்களது உடல் நலத்திலும் அக்கறை காட்டுங்கள் எனவும், மேற்கண்ட உணவு முறைகளை கொஞ்சம் டிரை பண்ணுங்கள் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.