உலக மாதவிடாய் சுகாதார தினம் என்பது மாதவிடாய் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மே 28 அன்று அனுசரிக்கப்படுகிறது. குழந்தை பருவத்திலிருந்தே மாதவிடாய் பற்றி நன்கு புரிந்துகொள்வது பாதுகாப்பான பழக்கங்களை வளர்க்க உதவும், இது தொற்று மற்றும் பிற நோய்களை மேலும் தடுக்கலாம். சரியான மாதவிடாய் சுகாதாரப் பொருளைப் பயன்படுத்துதல், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சருமப் பிரச்சனைகளைக் கையாள்வது, பட்டைகள் அல்லது டம்பான்களை சரியான முறையில் அப்புறப்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு முக்கியமானது.
"மாதவிடாய் குறித்தான புரிதல்கள் சமூக-கலாச்சார வரம்புகளால் மறைக்கப்பட்டுள்ளன, இதனால் டீன் ஏஜ் பெண்களுக்கு மாதவிடாய் சார்ந்த அறிவியல் உண்மைகள் மற்றும் சுகாதார நடைமுறைகள் பற்றி தெரிவதில்லை. இது நீண்டகால ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்" என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.
மாதவிடாயின் போது சரியான சுகாதாரம் இல்லாதது, ஆரோக்கியமற்ற நடைமுறைகளை பின்பற்றுவதால் நோய்த்தொற்று மற்றும் ஒவ்வாமையை இது உருவாக்கும்.இது பெண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
"பொருத்தமான மாதவிடாய் சுகாதாரப் பொருட்களைத் தேர்வு செய்யத் தவறி, எரிச்சல், தோல் சிவத்தல், அல்லது சொறி போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படும் பல பெண்கள் உள்ளனர். இருப்பினும், நாடு முழுவதும் உள்ள பல பெண்கள், சுகாதாரமற்று, மாதவிடாய் காலங்களில் துணிகளைப் பயன்படுத்துகின்றனர். பெண்களுக்கு இன்றுவரை பேட்ஸ் மற்றும் டம்பான்களை அப்புறப்படுத்துவதற்கான சரியான முறையைப் பற்றி தெரியாது, அவற்றை திறந்த வெளியில் தூக்கி எறிகின்றனர் அல்லது கழிவறையில் அடைத்துக் கொள்ளும் வகையில் எறிகின்றனர்.
1. 4-6 மணி நேரத்திற்கு ஒருமுறை சானிட்டரி நாப்கின்கள் அல்லது டம்பான்களை மாற்றுவது பிறப்புறுப்பு சுகாதாரத்தை பராமரிப்பதற்கான முக்கிய வழிகாட்டியாகும்.
மாதவிடாய் இரத்தம் நம் உடலில் பல்வேறு கிருமிகள் உற்பத்தி ஆவதற்கு வழிவகை செய்கிறது. நமது உடலில் தங்கும் சூட்டினால் இந்த கிருமிகள் உண்டாகின்றன. பிறப்புறுப்பில் இந்தக் கிருமிகள் தோன்றுவது உடலுக்கு உபாதையை ஏற்படுத்தும். சானிட்டரி நாப்கின்களை அடிக்கடி மாற்றுவது இந்த நோய்க்கிருமிகள் உண்டாவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.
2. ஒவ்வொரு முறையும் உங்கள் நாப்கினை மாற்றும் போதும் உங்கள் பிறப்புறுப்பு பகுதியை சரியாக சுத்தம் செய்யவும்
உங்கள் பிறப்புறுப்பைக் கழுவுவது மிகவும் முக்கியமானது, ஏனென்றால் உங்கள் சானிட்டரி நாப்கினை அகற்றிய பிறகு பாக்டீரியா உங்கள் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும். பெரும்பாலான மக்கள் தங்கள் பிறப்புறுப்பை சுத்தம் செய்து கழுவுகிறார்கள், ஆனால் சரியாக இல்லை. யோனியிலிருந்து ஆசனவாய் வரை கழுவ வேண்டும். எதிர்மறையாகக் கழுவுவதால் கிருமிகள் இன்னும் பிறப்புறுப்புக்குள் உள்ளே தள்ளப்படும் வாய்ப்புகள் அதிகம்.
3. சோப்புகள் அல்லது பிற பிறப்புறுப்பு சுகாதாரப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்
பிறப்புறுப்புக்கான சுகாதாரப் பொருட்களை உங்கள் மாதாந்திர பட்டியலில் சேர்ப்பது நன்மை தரும். இருந்தாலும் மாதவிடாய் காலத்தில் பிறப்புறுப்புக்கு அது தன்னை தானாகாவே சுத்தம் செய்துகொள்ளு இயல்பு இருப்பதால் அப்போது அதனை பயன்படுத்தத் தேவையில்லை.
4. சானிட்டரி நாப்கினை முறையாக அப்புறப்படுத்துங்கள்
டம்பான்கள் மற்றும் சானிட்டரி நாப்கின்களை சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். கிருமிகள் மற்றும் நோய்கள் பரவாமல் இருக்க அவற்றை தூக்கி எறிவதற்கு முன் அவற்றை ஒழுங்காக கவர் செய்து எரியவும்.பயன்படுத்திய டம்பான்கள் மற்றும் சானிட்டரி நாப்கின்களை கவர் செய்யும்போது அழுக்கடைந்த பகுதியை நீங்கள் தொடர்பு கொள்ள வாய்ப்புள்ளதால், அப்புறப்படுத்திய பின் கைகளை நன்கு கழுவுவது மிகவும் அவசியம்.