தென்னிந்திய உணவு என்றவுடன் நமது நினைவிற்கு வருவது இட்லி, தோசை, சட்னி, சாம்பார் தான். அதில் இட்லியில் ஒரு சில வகைகள் இருந்தாலும் அதிக வகைகளை கொண்ட தென்னிந்திய உணவு தோசை தான். சாதா தோசை, மசாலா தோசை, நெய் ரோஸ்ட், பேப்பர் ரோஸ்ட் என தோசை வகைகளை அடிக்கி கொண்டே போகலாம். இந்த வரிசையில் தற்போது புதிதாக ஒரு வகை தோசை இணைந்துள்ளது. இதுகுறித்து உணவு ரிவ்யூ செய்யும் வட இந்தியர் ஒருவர் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். 


அதன்படி மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் நெருப்பு தோசை என்ற ஒன்று விற்கப்பட்டு வருகிறது. அதாவது தீயை மேலே ஏரியவைத்து தோசை மாவு ஊற்றி அதன் உடன் சீஸ் மற்றும் சோளம் ஆகியவற்றை வைத்து அந்த நபர் தோசை ஒன்றை சுடுகிறார். அதில் அதிகமாக தோசை மீது நெருப்பு படுகிறது. ஒரு நெருப்பு குழம்பிற்குள் தோசை வெந்து வருகிறது. இதனால் தான் இந்த தோசைக்கு நெருப்பு தோசை என்று அவர்கள் பெயர் வைத்துள்ளனர். இந்த வகை தோசை ஒன்று 180 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 




இந்த வீடியோவை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த வாரம் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவிற்கு தற்போது வரை 6.6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். அத்துடன் 7 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அந்த வீடியோவை பார்த்து மகிழ்ந்துள்ளனர். மேலும் பலரும் மிகுந்த வியப்புடன் இந்த வீடியோ தொடர்பாக தங்களது பதிவையும் செய்து வருகின்றனர். 


 






வட இந்தியர்களுக்கு பொதுவாக தென்னிந்திய உணவாக தோசை, வடை மற்றும் சம்பார் மிகவும் பிடித்தமான உணவுகளில் ஒன்று. அதன் காரணமாகவே இந்த வீடியோ மிகவும் வைரலாகியுள்ளது. மேலும் இந்தக் கடை எங்கே இருக்கிறது என்று பலரும் முழு விவரங்களை கேட்டு தங்களை கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். நெருப்பு அனல் பறக்க அந்த நபர் தோசை சுடும் காட்சியும் சிறப்பாக அமைந்துள்ளது. அமித் சிரோஹா என்ற உணவு ரிவ்யூ செய்யும் நபர் இந்த தோசை செய்யும் முறை மற்றும் அதன் சுவை ஆகியவை குறித்து பதிவிட்டுள்ளார். அவருடைய பல உணவு ரிவ்யூ விடியோக்கள் அதிக கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: பீர் பாட்டில்கள் ஏன் பச்சை மற்றும் பழுப்பு நிறங்களில் இருக்கிறது தெரியுமா?