உலகில் மிகப்பெரிய சந்தை வைத்துள்ள பொருட்களில் பீரும் ஒன்று. இது வெறும் போதைக்காக பயன்படுத்தப்படும் பொருள் மட்டுமல்ல. பீர் குடிப்பதால் சில சிறிய நன்மைகளும் உள்ளது. ஆனால் அவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட அளவு தான். அதற்கு மேல் சென்றால் அதுவும் உடலுக்கு மிகவும் தீங்கானது தான். உலகெங்கும் விற்கப்படும் பீர் பாட்டில்கள் பெரும்பாலும் பச்சை மற்றும் பழுப்பு நிறங்களிலேயே இருக்கின்றன. அப்படி இந்த இரு நிறங்களில் மட்டும் பீர் விற்கப்படுவதற்கான காரணம் என்ன? அதற்கு பின் எதாவது கதை உள்ளதா?


பழுப்பு நிறம் வர காரணம்:




உலகில் முதலில் பல நூற்றாண்டுகளாக பீர் நிறம் எதுவும் இல்லாத பாட்டில்களில் தான் விற்கப்பட்டு வந்தது. அப்போது சூர்ய ஒலியிலிருந்து வரும் யுவி கதிர்கள் இந்த நிறம் இல்லாத பாடலுக்குள் சென்று இருக்கும் பீருடன் வேதியியல் மாற்றம் ஏற்படுத்துகிறது. இதனால் பாட்டிலில் உள்ள பீரின் சுவை மாறுவது மட்டுமல்லாமல் ஒரு கேட்ட வாடையும் வர தொடங்கியது. இந்த நிலையை தடுக்க முதல் முறையாக பழுப்பு நிற பாட்டில்களில் பீர் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிற பாட்டில்களுக்குள் சூர்ய வெளிச்சத்திலிருந்து வரும் யுவி கதிர்கள் உள்ளே செல்ல முடியாது. இதனால் உள்ளே இருக்கும் பீரின் சுவை மற்றும் தன்மை மாறாமல் இருந்தது. மேலும் நீண்ட நாட்களுக்கு பாட்டிலுக்குள் இருக்கும் பீரும் கேட்டுபோகாமல் இருந்தது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக பழுப்பு நிற பாட்டில்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டன. 


பச்சை நிறம் வர காரணம்:


இரண்டாம் உலகப் போர் காலத்தில் பழுப்பு நிற கண்ணாடிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மீண்டும் நிறம் இல்லாத பாட்டில்களில் பீரை அடைத்து வைக்க திட்டமிட்டனர். அப்போது பச்சை நிற கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்தலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு வந்துள்ளது. மேலும் அந்த பச்சை நிற பாட்டிலில் இருக்கும் பீர் 'பிரிமியர்' வகை பீர் என்று சொல்லி விற்க தொடங்கினார். அதுவே பிற்காலங்களில் ஒரு அடையாளமாக மாறியுள்ளது. அதாவது உலகளவில் பிரிமியர் ரக பீர் என்றால் அது பச்சை நிற பாட்டிலில் தான் இருக்கும் என்ற அடையாளத்தை தந்தது. 




இந்த இரண்டு நிகழ்வுகளுக்கு பிறகு பீர் பாட்டில்கள் உலகெங்கும் பழுப்பு மற்றும் பச்சை நிறங்களில் மட்டுமே வர தொடங்கின. இந்த இரண்டு நிறங்கள் தேர்வு செய்யப்பட்டிதற்கான காரணம் இது தான். இது மிகவும் வேடிக்கையான ஒன்று தான். குடிப்பழக்கம் எப்போதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆகவே குடிப்பழக்கத்தை முடிந்த வரை கைவிட்டு வாழ்வில் நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ்வோம் என்ற உறுதியை எடுப்போம். அதுவே நமக்கும் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் நல்லது. 


மேலும் படிக்க: இப்படியும் வேலை இருக்கா.. பேப்பர் போட்டுட்டு போயிடலாமா மச்சி மொமெண்ட்..!