நகங்கள் அழகாக இருக்க நகங்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். பெரும்பாலான பெண்கள் நகங்களை பராமரிப்பதில் தனி கவனம் செலுத்துகின்றனர். சிலருக்கு நகத்தில் சொத்தை உண்டாகும். மேலும் சிலருக்கு நகம் எளிதில் உடைந்து விடும்.
ஊட்டச்சத்து குறைபாடு:
கால்சியம் சத்து குறைபாடு தான் நகம் உடைவதற்கு காரணம் என கூறப்படுகிறது. எனவே நகங்களை ஆரோக்கியமாக பராமரிக்க விரும்பினாலும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
நகத்தை பராமரிப்பது எப்படி?
சிலருக்கு கை மற்றும் கால்களில் நகங்கள் அதிக கடின தன்மையுடன் இருக்கும். அவர்களின் நகத்தை வெட்டுவது சிறமமாக இருக்கும். அப்படி சிறமப்படுபவர்கள், குளித்தவுடன் நகத்தை வெட்டினால் எளிதாக வெட்ட முடியும். குளித்து முடித்தவுடன் நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால் எளிதாக வெட்ட முடியும்.
நகத்தை வெட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் தேங்காய் எண்ணெய் சிறிதளவு தடவி ஊறிய பின் நகத்தை வெட்டினால் எளிதாக வெட்ட முடியும். துணி துவைத்தல், பாத்திரம் கழுவுதல் போன்ற வேலைகளுக்கு பின் நகங்களில் சோப்பு துணுக்குகள் உட்புக வாய்ப்புகள் உள்ளது. அவ்வாறு சோப்புகள் நகங்களில் இருந்தால் நாளைடைவில் நகம் சொத்தை ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே நகங்களை நன்றாக பிரஷ் வைத்து சுத்தம் செய்து கொள்ளலாம்.
சுத்தம் முக்கியம்:
நகங்களிலும் வறட்சி ஏற்படும். நகங்களில் வறட்சி ஏற்படாமல் தடுக்க, இரவு படுக்கும் முன் கை மற்றும் கால் நகங்களில் சிறிதளவு தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றை நகத்தில் தடவி 2 நிமிடத்திற்கு மசாஜ் செய்து விட்டு தூங்குவதன் மூலம், நகங்கள் ஈரப்பதத்துடன் இருக்கும். மேலும் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து நகங்களைத் தேய்த்து சுத்தப்படுத்தினால் நகங்களில் உள்ள அழுக்குகள் நீங்கி நகங்கள் சுத்தமாகவும் பளிச்சென்றும் இருக்கும். நகத்தினை பற்களால் கடிக்கும் பழக்கம் மிகவும் தவறானது. இதனால் நகத்தில் உள்ள கிருமிகள் வாய் வழியாக சென்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
பாதிப்படைவது எப்படி?
நகங்களை வாரத்திற்கு ஒரு முறை கட்டாயம் வெட்ட வேண்டும். நகம் வளர்க்க விரும்புபவர்கள் நகங்களை ட்ரிம் செய்து நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். கழிவறை, குளியலறைகளை சுத்தம் செய்யும் போது நாம் பயன்படுத்தும் சில கெமிக்கல் நிறைந்த லிக்யூட்களால் நகங்கள் பாதிப்படையும். எனவே கைகளில் உறைகள் அணிந்து கொண்டு இவற்றை பயன்படுத்துவது நகங்களை பாதிக்காமல் இருக்கும்.
கற்றாழை ஜெல் 2 ஸ்பூன், கிளிசரின் 2 ஸ்பூன் எடுத்து மிக்ஸ் செய்து கை, கால்களில் நன்றாக அப்ளை செய்துவிட்டு 10 நிமிடங்கள் கழித்துக் கழுவி வர நகங்கள் மற்றும் கை கால்கள் மிருதுவாக மாறும் என சொல்லப்படுகின்றது.