கொண்டைக்கடலை புலாவ் செய்வது எப்படி என்று பார்க்காலம். உணவில் தினமும் குறிப்பிட்ட அளவு கொண்டைக்கடலை இருப்பது நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஏதாவது ஒரு சிறு தானிய வகையை உணவில் சேர்ப்பது ஆரோக்கியமாக இருக்க உதவும்.


என்னென்ன தேவை?


வேகவைத்த கொண்டைக்கடலை - ஒரு கப்


அரைத்தெடுத்த தேங்காய் பால் - ஒரு கப்


ஊற வைத்த அரிசி - ஒரு கப்


பச்சை மிளகாய் - 2


வெங்காயம் - 2


எண்ணெய்- தேவையான அளவு


கரம் மசாலா - அரை டீ ஸ்பூன்


பிரியாணி இலை - 1 


பச்சை ஏலக்காய் - 2


கிராம்பு - 1


கொத்தமல்லி தூள் - 1 ஸ்பூன்


உப்பு - தேவையான அளவு


இஞ்சி - பூண்டு விழுது - அரை டீ ஸ்பூன்


எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்


செய்முறை


இரவு ஊறவைத்த கொண்டைக்கடலையை நன்றாக வேகவைத்து தனியே வைக்கவும். குக்கர் அல்லது பாத்திரம் பயன்படுத்தலாம். அடுப்பில் மிதமான தீயில், குக்கரை வைத்து எண்ணெய் அல்லது நெய் 4 டேபிள் ஸ்பூன் ஊற்றவும். நெய் சூடானதும் அதில், பச்சை ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு, சீரகம், பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். 


வெங்காயம் நன்றாக வதங்கியதும், இஞ்சி - பூண்டு விழுது,கொண்டைக்கடலையை சேர்த்து, கரம் மசாலா, உப்பு சேர்த்து கலக்கவும். இதோடு, ஊற வைத்த அரிசியை சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வர விடவும். இந்த முறையில் செய்ய கொண்டைக்கடலை வேக வைக்காமலும் சேர்க்கலாம். புலாவ் மாதிரி செய்யும் முறை. ரைஸ் மாதிரி செய்ய வேண்டும் என்றால் அரிசியை வேக வைத்து எடுக்கவும். பாத்திரத்தில் செய்வதனால், 20-30 நிமிடங்கள் வரை வெந்ததும் கொண்டைக்கடலை ரைஸ் ரெடி.


லன்ச் பாக்ஸ் உணவுகள் பட்டியல் இதோ வெள்ளரிக்காய் ரைஸ் இனிமேல் சேர்த்துக் கொள்ளுங்கள்.


என்னென்ன தேவை?


வேகவைத்த சோறு - ஒரு கப்


துருவிய வெள்ளரிக்காய் - 1 1/2 கப்


துருவிய தேங்காய் - அரை கப்


பொடியாக நறுக்கியு கொத்தமல்லி தழை - சிறிதளவு



தாளிக்க


முந்திரி -  10 


வறுத்த வேர்க்கடலை - அரை கப்


காய்ந்த சிகப்பு மிளகாய் - 2


நெய் - 3 டேபிள் ஸ்பூன்


கடுகு - அரை டீ ஸ்பூன்


சீரகம் - அரை டீ ஸ்பூன்


உளுத்தம் பருப்பு - அரை டீ ஸ்பூன்


பெருங்காய தூள் - ஒரு டீ ஸ்பூன்


கருவேப்பிலை - சிறதளவு


உப்பு - தேவையான அளவு



செய்முறை


அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாய் நன்றாக சூடானது மூன்று டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்கவும். தேவையான அளவு சேர்க்கலாம். இதில் கடுகு, சீரகம், காய்ந்த சிகப்பு மிளகாய், உளுந்து, கருவேப்பிலை எல்லாம் சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் முந்திரி சேர்த்து கொள்ளவும். வேர்க்கடலையும் சேர்க்கலாம். அது நன்றாக பொன்னிறமாக வதங்கியதும் துருவிய வெள்ளரிக்காய், தேங்காய், உப்பு, பெருங்காய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.  வெள்ளரிக்காய் கொஞ்சம் வதங்கியதும் வேக வைத்த சாதம், கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். வெள்ளரிக்காய் ரைஸ் ரெடி. 


வெள்ளரிக்காய் நன்மைகள்


வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடையும். இதில் வைட்டமின் கே அதிக அளவில் இருக்கிறது. எலும்பின் அடத்தி அதிகரிக்கும். 


சரும பராமரிப்பு, கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வெள்ளரிக்காய் ஜூஸ் தினமும் குடிக்கலாம்.


வெள்ளரிக்காய் குறைந்த கலோரி கொண்ட உணவு என்பதால் உடை எடை குறைக்க நினைப்பவர்கள் டயட்டில் சேர்த்து கொள்ளலாம்.