குளிர்சாதன பெட்டி என்று கூறினால் பலருக்கு இன்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் ஃப்ரிட்ஜ்... என்றே தொடங்குவோம். ஃப்ரிட்ஜ் எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது.... முதலில் அதை தெரிந்து கொள்வோம். மருந்துகளையும், சமைக்காத உணவுகளையும் பாதுகாக்கும் நோக்கில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வீட்டு உபயோக சாதனம். இன்று ஒவ்வொரு வீட்டு ஃப்ரிட்ஜை திறந்தால்... கடலை மிட்டாயிலிருந்து கருவாடு வரை இல்லாத பொருட்கள் இல்லை. சில இடங்களில் குழந்தைகளின் நோட்டு புத்தகங்களை கூட வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள். 




ஃப்ரிட்ஜ் பொருளை பாதுகாக்கும் இடம்; அங்கு பொருளுக்கு பாதிப்பு இல்லாததை வைத்தால், பிற பொருட்களும் கெட்டுப் போகும் என்கிற அடிப்படை விதியை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இதை புரிந்து கொண்டால், உடலுக்கு உபாதை தரும் உணவுகளை நாம் தவிர்க்க முடியும். ஃப்ரிட்ஜில் எதை வைக்க கூடாது? என்பதை தெரிந்தால், வைப்பது தானா புரிந்து விடும். வாங்க பார்க்கலாம்... 


ஃப்ரிட்ஜில் எதையெல்லாம் வைக்க கூடாது?



  • சுடச்சுட சமைத்த உணவுகளை கட்டாயம் வைக்ககூடாது. அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த சூடு சிறிது நேரத்தில் ஃப்ரிட்ஜ் முழுக்க பரவி, எஞ்சியிருக்கும் பொருட்களை சேதப்படுத்தும். இதனால், அவை எளிதில் கெட்டுப்போகும். காய்ச்சிய பாலை வைக்க கூடாது; மீறி வைத்தால் பால் கெட்டுப்போகும். அதே போல ஃப்ரிட்ஜில் வைத்த பாலை உடனே சூடுபடுத்தக்கூடாது. அதை இயல்பு நிலைக்கு வரும் வரை பொறுத்திருந்து தான் காய்ச்ச வேண்டும். 

  • இறைச்சிகளை இன்று நாம் அதிகம் ஃப்ரிட்ஜில் வைக்கிறோம். குறிப்பாக, சிக்கன், மட்டனை முன்கூட்டியே வாங்கி ஃப்ரிட்ஜில் இருப்பு வைக்கும் பழக்கம் பலருக்கு வந்திருக்கிறது. பொதுவாகவே இறைச்சிகளில் பாக்டீரியா வளர்ச்சி அதிக அளவில் இருக்கும். அவற்றை நாம் ஃப்ரிட்ஜின் சாதாரண பகுதிகளில் வைத்தால், அது பிற பொருட்களுக்கு பாக்டீரியா பரவ காரணமாகும். அது நம் உணவை, விஷமாக்கும் தன்மை கொண்டது. இறைச்சிகளை வைப்பதற்கு உள்ள ப்ரீஷர் அறையில் மட்டும் தான் அவற்றை வைக்க வேண்டும். 





  • எந்த காரணம் கொண்டும் பழங்களை நறுக்கிய பின், ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது. அது பாக்டீரியா தாக்குதலுக்கு ஆளாகலாம். முழுப்பழங்களை வைப்பதால் பிரச்சனை இல்லை. அவ்வாறு வைக்கும் பழங்களை எடுத்து சிறிது நேரம் கழித்து நறுக்கி சாப்பிடுவது பலன் தரும். 

  • ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது ஒரு முக்கிய பொருள் வெங்காயம். ஏனென்றால், வெங்காயத்திற்கு தன் வாசனையை பரப்பும் தன்மை உண்டு. ஃப்ரிட்ஜில் வைக்கும் போது, அது பிற பொருட்களின் மீது தன் வாசனையை கடத்தும். மேலும் அதன் தன்மை, குவர்சிட்டின், ஃபோலிக் ஆசிட் சத்துக்களை குறைத்துவிடும். வெங்காயம் வெளியும் வைக்கும் பொருள் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 

  • கெட்ச்சப் மற்றும் சாஸ் போன்றவை எளிதில் கெடாத பொருட்கள். எனவே அவற்றை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டிய அவசிமில்லை. நீண்ட நாள் பயன்பாட்டிற்கு வரும் பொருட்களி நாம் வெளியில் வைத்தத பயன்படுத்தலாம். அதை உள்ளே அடைத்து வைக்க வேண்டிய அவசியமில்லை. ஊறுகாயும் கிட்டதட்ட இது மாதிரி தான். நீண்ட நாள் வைக்கப்படும் பொருட்கள், இயற்கையாகவே பாக்டீரியாவை ஏற்படுத்தும். இதனால் உங்கள் ஊறுகாயும் கெட்டுப் போய், உணவுப்பொருட்களும் வீணாகும். தேனும் அந்த ரகம் தான். 

  • நிறைய பேர் செய்யும் தவறு... ஃப்ரிட்ஜில் வெள்ளைப் பூண்டுகளை வைப்பது. வெள்ளைப்பூண்டு ஒரு வாசனை பொருள். அதை நீங்கள் குளிர்சார்ந்த பகுதியில் அடைத்து வைக்கும் போது, அது தன் வாசனையை இழக்கும். நீர் படாத பகுதியிலிருந்து பாதுகாப்பாக வைப்பது தான் சிறந்தது. 





  • ப்ரெட் போன்ற ரொட்டி வகைகளை ஃப்ரிட்ஜில் வைக்கவே கூடாது . இதனால் அதன் சுவை மாறும்; விரைவில் காய்ந்து விடும். அதே போல், தயார் செய்யப்பட்ட காபி, டீ போன்ற பானங்களை ஃப்ரிட்ஜில் வைக்கலாம், தேவைப்படும் போது அதை சூடாக்கி பருகலாம் என நினைப்பவர்கள் நிறைய உண்டு. இது சுவையை குறைக்கும், காஃபைன் விஷத்தன்மை அடையவும் வாய்ப்பு உண்டு.

  • தர்பூசணி, முலாம்பழம், பப்பாளி போன்ற நீர் சத்து நிறைந்த உணவுகளை வெட்டிய பின் ஃப்ரிட்ஜில் வைப்பதை தவிர்க்கவும். அப்படி வைக்க வேண்டிய கட்டாயம் இருந்தால், அதிகபட்சம் ஒருநாள். அதற்கு மேல் வைக்க கூடாது. வைத்தால் அவை நீர்சத்தை இழக்கும். 

  • இது ரொம்ப முக்கியமான விஷயம்... கொத்தமல்லி, கருவேப்பில்லையை பலர் ஃப்ரிட்ஜில் வைக்கிறார்கள். ஆனால், அவை அதனால் வாடிப் போவதற்கு தான் அதிக வாய்ப்பு. மாறாக ஈரத்துணியிலோ, தண்ணீரிலோ போட்டு வெளியில் வைத்தால், நீண்டநாளுக்கு அவை வரும். உருளைக்கிழங்கையை அப்படியே வைக்க கூடாது; மாறாக ஏதாவது ஒரு பாலித்தீன் பாக்கெட்டில் சுற்றி வைக்கலாம். 

  • முன்பு கூறியது போல, ஃப்ரிட்ஜ் மருந்துகளை பாதுகாக்கவும் உருவாக்கப்பட்டது. ஆனால், அது உணவுப் பொருட்களுக்கானதாகிவிட்டது. இன்று சுகர் பலருக்கு தவிர்க்க முடியாத நோயாகிவிட்டது. வீட்டின் இன்சுலின் போடுபவர்கள், அந்த மருந்தை பத்திரமாக ஃப்ரிட்ஜில் கையாள வேண்டும். அதன் அருகில் இறைச்சிகளோ மற்ற பாக்டீரியா பரப்பும் உணவுகளை வைக்க கூடாது. முடிந்தவரை தனி பகுதியில் வைப்பது நல்லது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண