தீபிகா தமிழ் ரசிகர்களுக்கு புதியவரல்ல. கோச்சடையானில் அனிமேஷன் உருவாக தோன்றியிருந்தாலும் கூட, பெரும்பாலும் தமிழ் ஓடிடி, பிறமொழித் திரை ரசிகர்களுக்கு தீபிகா படுகோனின் படங்கள் எப்போதுமே பெரிய ட்ரீட்தான். பாஜிராவ் மஸ்தானி தொடங்கி பிக்கு, பத்மாவத் வரை பாலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டார் எல்லா ஜானரிலும் ஒரு ரவுண்ட் வந்திருக்கிறார்.



அந்த வகையில், கெஹ்ரையானை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு ட்ரெயிலர் ஒரு விருந்தாக வந்துவிட்டது. பிப்ரவரி 11-ஆம் தேதி அமேசானில் வெளியாகிறது கெஹ்ரையான். இன்று வெளியாகியிருக்கும் ட்ரெயிலர் கதையின் போக்கை அழகாகக் காட்டியிருக்கிறது. காற்று புகா இடத்திலும் கூட தோண்டிப்புகும் டெக்னாலஜி வளர்ந்த, கார்ப்பரேட் காலத்தில் மாறியிருக்கும் உறவுகளின் தன்மையை காட்டுகிறது கெஹ்ரையான் ட்ரெயிலர்.



Moody, Sexy, Intense என காதல் மனைவி தீபிகாவின் பட ட்ரெயிலருக்கு கேப்ஷன் கொடுத்திருக்கிறார் ரன்வீர் சிங். இந்தப் பதிவில் ஆழத்தை நாங்கள் உணர்கிறோம் பாஸ் என ஃபயர் விட்டிருக்கிறது அமேசான் ப்ரைம் வீடியோ அக்கவுண்ட். பிப்ரவரி 11-ஆம் தேதி ஓடிடி கலாட்டாவாக இருக்கும் என நம்பலாம்.






கெஹ்ரையானைப் பற்றி ஏற்கெனவே பகிர்ந்திருந்த தீபிகா, “இதில் நடமாடும் கதாபாத்திரங்களில் நிறைய உண்மைத்தன்மை இருக்கும். இந்த ரோல் என் மனதுக்கு நெருக்கமானது.  சவாலானதும்கூட” எனச் சொல்லியிருந்தார். ட்ரெயிலரை வைத்து ஆழமாக தோண்டாமல் ரோல்களை மட்டும் கிரகிக்கலாம். தீபிகா ஒரு ஃபிட்னெஸ் பயிற்சியாளர். கரன் தீபிகாவின் கணவர். தீபிகாவின் தங்கை டியாவுக்கு நிச்சயமான ஜெயினுடன் தீபிகாவுக்கு காதல் மலர்வதும், உறவுச்சிக்கலும்தான் கெஹ்ரையான் சொல்லப்போகும் கதை.


காத்திருக்கலாம், பிப்ரவரி 11 வரை.