ஆங்கில மாதங்களில் எப்போதும் ஒரு சிறப்பு வாய்ந்த மாதம் என்றால் அது ஆகஸ்ட் தான். ஏனென்றால் தொடர்ச்சியாக மாதத்தில் 31 நாட்கள் இருக்கும் ஒரே மாதம் ஆகஸ்ட் தான். ஜூலை மாதத்தில் 31 நாட்கள் இருக்கும். அதன்பின்னர் மீண்டும் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தான் 31 நாட்கள் இருக்கும். இப்படிபட்ட சிறப்பு ஆங்கில மாதங்களில் ஆகஸ்ட் மாதத்திற்கு மட்டுமே மிகவும் சிறப்பான ஒன்று. 


இந்திய சுதந்திரத்திலும் ஆகஸ்ட் மாதம் மிகவும் முக்கியமான மாதம். இந்தியாவின் முதல் பெரிய புரட்சியான ஒத்துழையாமை இயக்கம் 1920-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி தொடங்கியது. இந்தியாவிற்கு சுதந்திரமும் 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி கிடைத்தது. ஆகவே இந்திய நாட்டின் வரலாற்றில் எப்போதும் தவிர்க்க முடியாத மாதமாக ஆகஸ்ட் உள்ளது. பொதுவாக ஆகஸ்ட் மாதம் தொடர்பாக ஒரு வாக்கியம் உள்ளது. அதாவது 


"லெஜெண்ட்ஸ் ஆர் பார்ன் இன் ஆகஸ்ட்" - ஆகஸ்ட் மாதத்தில் தான் மிகப்பெரிய ஜாம்பவான்கள் பிறப்பார்கள் என்ற வாக்கியம் உள்ளது. அது என்னமோ தெரியவில்லை இந்த வாக்கியம் மிகவும் பொருத்தமான ஒன்றாக அமைந்துள்ளது. அதற்கு காரணம் இந்த மாதத்தில் பிறந்த பலர் தங்களுடைய துறையில் சிறப்பாக சாதித்துள்ளார்கள். அத்துடன் அந்த துறைகளில் அவர்கள் மறக்க முடியாத பெரிய ஜாம்பவான்களாகவும் உருவெடுத்து உள்ளனர்.


நிலவில் முதல் முதலாக கால் வைத்த நீல் ஆம்ஸ்டார்ங்(ஆகஸ்ட் 3), அண்ணை தேரசா(ஆகஸ்ட் 26), மைக்கேல் ஜாக்சன்(ஆகஸ்ட் 29) பல முக்கியமான ஜாம்பவான்கள் இந்த மாதத்தில் பிறந்துள்ளனர். குறிப்பாக விளையாட்டு துறையில் சாதித்த சில முக்கியமான ஜாம்பவான்கள் இந்த மாதத்தில் தான் பிறந்துள்ளனர். 


உசைன் போல்ட்: (ஆகஸ்ட் 21)


தடகள உலகை ஆட்டி வைத்த ஒரு வீரர் என்றால் அது உசைன் போல்ட் தான். அவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் செய்த உலக சாதனை இன்று வரை பலரை வியக்க வைத்துள்ளது. அப்படிப்பட்ட ஜாம்பவான் உசைன் போல்ட் 1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி பிறந்துள்ளார். 


டான் பிராட்மேன்:(ஆகஸ்ட் 27):


கிரிக்கெட் உலகில் ஜாம்பவான் வீரர் டான் பிராட்மேன். இவர் 1908ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் பிறந்தவர். கிரிக்கெட் விளையாட்டில் இவருடைய 99.9 என்ற சராசரியை யாரும் எளிதாக முறியடிக்க முடியாத ஒன்று. 




ரோஜர் ஃபெடரர்(ஆகஸ்ட் 8):


டென்னிஸ் உலகில் மிகவும் முக்கியமான ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் ரோஜர் ஃபெடரர். தன்னுடைய 40வயதிலும் டென்னிஸ் களத்தில் இன்னும் நின்று ஆடி அசத்தி கொண்டிருக்கும் சிறப்பான வீரர்களில் ஒருவர். இவர் 1981ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி இவர் பிறந்தார். 


மேஜர் தயான்சந்த்:(ஆகஸ்ட் 29):




ஹாக்கி உலகில் மாயஜால வித்தைக்காரர் என்று போற்றப்படுபவர் மேஜர் தயான்சந்த். இவருடைய ஆட்டத்தை பார்த்து ஹிட்லரே மிகவும் வியந்துள்ளார். மேஜர் தயான்சந்த் ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி பிறந்தார். இவருடைய பிறந்தநாள் தான் இந்தியாவில் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. 


இவர்கள் தவிர தற்போது இந்திய அணிக்கு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மீரா பாய் சானு தன்னுடைய 27ஆவது பிறந்தநாளை  வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி கொண்டாடுகிறார். 




மேலும் பல இந்திய மற்றும் வெளிநாடு  விளையாட்டு வீரர்களும் தங்களுடைய பிறந்தநாளை இம்மாதம் கொண்டாடுகின்றனர். 


துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை -இளவேனில் வாலறிவன்- ஆகஸ்ட் 2


ஜிம்னாஸ்டின் வீராங்கனை -தீபா கர்மார்கர்- ஆகஸ்ட் 9


பேட்மிண்டன் வீரர் -சாய் பிரணீத்-ஆகஸ்ட் 10


ஸ்குவாஷ் வீரர் -சவுரப் கோஷல்-ஆகஸ்ட் 10


டென்னிஸ் வீரர் - பீட் சாம்ப்ரஸ்- ஆகஸ்ட் 12


டென்னிஸ் வீரர் - சுமித் நகல் -ஆகஸ்ட் 16


பேட்மிண்டன் வீரர் - சத்விக் சாய்ராஜ் ரான்கிரெட்டி- ஆகஸ்ட் 16


ஹாக்கி வீரர்- வாசுதேவன் பாஸ்கரன்-ஆகஸ்ட் 17


கூடைப்பந்து வீரர்- கோப் பிராயண்ட்-ஆகஸ்ட் 23


மல்யுத்த வீராங்கனை-வினேஷ் போகாட்-ஆகஸ்ட் 25


ஃபென்சிங் வீராங்கனை-பவானி தேவி-ஆகஸ்ட் 27


டென்னிஸ் வீரர்- ஆண்டி ரோடிக்-ஆகஸ்ட் 30


கிரிக்கெட் வீரர்-ஜவகல் ஶ்ரீனாத்-ஆகஸ்ட் 31


இவ்வாறு பலரும் ஆகஸ்ட் மாதத்தில் தங்களுடைய பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். ஆகஸ்ட் மாதத்திற்கும் ஜாம்பவான்களுக்கும் விளையாட்டுத் துறைக்கும் ஒரு மிகப்பெரிய தொடர்பு உண்டு என்பதை இந்தப் பட்டியல் மூலம் நீங்கள் அறியலாம். 


மேலும் படிக்க:Happy Friendship Day: 'என் ஃப்ரெண்ட போல யாரு மச்சான்'- நண்பர்களுக்கு ஒரு சமர்ப்பணம் !