லீப் தினத்தைக் கொண்டாடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் பிப்ரவரி 29- லீப் ஆண்டாக சொல்லப்படுகிறது. இந்த தினத்தை கொண்டாடும் வகையில் கூகுள் வெளியிட்டுள்ள சிறப்பு டூடுலில், குளத்தில் தாமரை இலையில் தவளை ஒன்று வந்து தாவி அமர்வதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 28-க்கும் மார்ச் 1ஆம் தேதிக்கும் இடையே பிப்ரவரி 29-ல் ஒரு தவளையின் படத்துடன் அது தாவி வந்து அமர்ந்து சிரிப்பது போல் அமைந்துள்ளது. குளத்தில் பிப்ரவர் 28 மற்றும் மார்ச்,1 உள்ளது. லீப் டேயான 29-ம் தேதியில் தவளை குதித்து வந்து அமர்கிறது. தவளை தாவிச் செல்லும்போது பிப்ரவரி 29 மறைந்துவிடுகிறது. மேலும், பிப்ரவரியின் போனஸ் தினம் இது என்றும் கூகுள் குறிப்பிட்டுள்ளது. லீப் டே-வை கொண்டாடுவோம் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.
ஹாப்பி லீப் டே!