தென் இந்தியாவில் அதிக அளவில் காலை மற்றும் மாலை நேரங்களில் டிஃபன் போன்ற உணவுகளை அதிகமாக உண்ணுவதை நடைமுறையில் வைத்துள்ளோம் . இதிலும் குறிப்பாக உணவுகளில் இட்லியானது ஒரு இன்றியமையாத உணவாக உள்ளது. பொதுவாக இட்லியானது நூற்றில், 90 பேருக்கு பிடித்த  உணவாகவே உள்ளது.


இட்லியானது உடல்நலத்திற்கு  ஆரோக்கியமானது. பஞ்சு போன்ற லேசான அதே நேரத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டின் இணைந்த ஒரு சமச்சீர் உணவாகவும் இட்லி உள்ளது. இது உடல் நலம் சரியில்லாதவர்களுக்கு உகந்த உணவுப் பொருளாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.


அரிசியை நன்கு ஊற வைத்து ,அதை நன்றாக அரைத்துக் கொண்டு இதே போலவே உளுந்தையும் ஊற வைத்து நன்றாக அரைத்து,இரண்டு மாவுகளையும்  ஒன்றாக கலந்து  வைத்த பின்பு, காலையில் இதன் மூலம் தயாரிக்கப்படும் இட்லி மற்றும் தோசைக்கு  தென்னிந்தியாவின் மக்கள் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.


இட்லி உங்களுக்கு வயிற்றில் அடைத்துக் கொள்ளாமல் ஒரு திருப்தியான உணவாக இருக்கின்றது. நீராவியில் வேக வைக்கப்படுவதினாலும் எண்ணெய்கள் கலப்பில்லாததாலும் இட்லி செரிமானத்திற்கு  உகந்த உணவாக  அனைவருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. இத்தகைய நன்மைகள் நிறைந்த இட்லியானது நோயாளிகள், குழந்தைகள் மற்றும் சராசரி மனிதர்கள் என அனைவருக்கும் ஏற்ற ஒரு காலை அல்லது இரவு நேர உணவு என்றே சொல்லலாம்.


அதிலும் குறிப்பாக தேங்காய் சட்னி,வெங்காய சட்னி, புதினா சட்னி, வெங்காய தக்காளி தொக்கு, வடைகறி மற்றும் சாம்பார் என்று இந்த இட்லிக்கு தொட்டுக்கொள்ள தரப்படும்  உணவுப் பொருட்களோடு  இதன் சுவை நம்மை அடிமைப்படுத்தி விடும் என்றே சொல்லலாம். சில இடங்களில் வேர்க்கடலை சட்னியும்  இட்லியோடு தொட்டு சாப்பிடுவதற்கு உகந்ததாக, நமது  நாவில் நீரை வரவழைக்கும்.


அப்படிப்பட்ட இந்த இட்லியை தயாரிப்பதற்கு வீடுகளில் இன்று  இயலாத நிலையில் உள்ளது . ஏனெனில் இந்த காலத்து பெண்களுக்கு இட்லி மாவு அரைப்பது  என்பது மிகப்பெரிய வேலைகளில் ஒன்றாக இருகிறது. அதுவும்  நமது தாத்தா, பாட்டி காலத்தில் இருந்ததைப்போல  உரலில் இவர்கள் மாவரைப்பதில்லை அதற்கு மாறாக  வெட் கிரைண்டர் அல்லது மிக்ஸியில் அரைக்கிறார்கள்  அப்படி இருந்தும்  தற்காலங்களில்  வீட்டில் இட்லி மாவு தயாரிப்பது என்பது குறைந்து கொண்டே போகிறது. அதற்கு பதிலாக கடைகளில் மாவு வாங்கி, இட்லி மற்றும் தோசை தயாரிக்கும்போது அது உடலுக்கு ஆரோக்கியமானதாக அமைவதில்லை. 


இதற்கு மாற்றாக உருவானதே  ரவா இட்லி இட்லி ஆகும். ஏனென்றால் இதன் செய்முறை நேரமானது. மிகமிகக் குறைவு. இதனை எளிதில் செய்து உண்ணலாம். இத்தகைய  முருங்கை இலை  கலந்த ரவா இட்லி சாப்பிடும் பொழுது அதனுடன் சாம்பார் மற்றும் சட்னியை வைத்து சாப்பிட்டால் அதன் ருசியானது இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும்.


இது பொதுவாக சாம்பார் மற்றும் சட்னி ரெசிபிகளுடன் பரிமாறப்படுகிறது. ஆனால் காரமான சிவப்பு தக்காளி சட்னியுடன் மிகவும் சுவையாக இருக்கும். நாம் முன்பு சொன்னது போல் இதனை செய்யும் முறையானது மிகவும் எளியது.அதனால் இதனை செய்யும் நேரமானது மிகமிகக் குறைவாகவே இருக்கும். இது பொதுவாக அனைவருக்கும் பிடித்தமான மற்றும் சத்துள்ள உணவாகவும் இருக்கும். இது சமைக்க 15 நிமிடங்கள் ஆகும். நீங்கள் காலை உணவாக செய்யலாம் அல்லது  மதிய உணவு வரிசையிலும் இதை வைக்கலாம். நீங்கள் குறுகிய நேரத்தில் சமைக்க நினைக்கும் பொழுது இந்த ரவா இட்லி சிறந்த உணவாகும். அதிக சத்துக்கள் நிறைந்த குறுகிய நேரத்தில் செய்யக்கூடிய இந்த ரவா இட்லி எவ்வாறு செய்வது என்பதையும்,அதன் செய்முறையையும் பற்றியும் இப்போது தெரிந்துகொள்வோம்.


இந்த இட்லி (முர்முரா இட்லி) தயாரிக்க முதலில், ஒரு கப் முருங்கையை எடுத்து கழுவி, பின்னர் மென்மையான பேஸ்டாக அரைத்து கொள்ளவும். இப்போது இந்த பேஸ்ட்டில் ரவா, உப்பு, தயிர் சேர்க்கவும். மாவு கட்டி இல்லாமல்  நன்கு கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.சிறிது நேரம் அதனை வைத்துவிட்டு , ​​சமைப்பதற்கு முன், சிறிது  உப்பு சேர்த்து, பாத்திரங்களில் ஊற்றவும்.


இதனால் சூடான சுவையான இட்லி ஆனது தயாராகிறது. இது ஆரோக்கியமானதாகவும், சுவையாகவும் இருக்கிறது. மேலும்  முருங்கை இலை சேர்த்ததினால்  இரும்பு சத்து கால்சியம் தாது உப்புக்கள் என  சத்துக்களோடு பார்ப்பதற்கும் பச்சை நிறத்தில்  நம் வீட்டு குழந்தைகளை  கவர்ந்து இழுக்கும். மேலும் இதை தயாரிக்க குறைந்தபட்ச மற்றும் அடிப்படை பொருட்கள் தேவைப்படுகின்றன. அதிக நேரத்தை மிச்சப்படுத்துவது மற்றும் எளிதில் சமைத்து உடல் ஆரோக்கியத்தையும், மேம்படுத்தும் என்பதோடு, மிகக் குறுகிய நேரத்தில் செய்து முடிக்க முடியும் என்பதும் ஒரு சிறந்த விஷயமாகும்.