பல் வலி முதல் நீரிழிவு பிரச்சனை, மூச்சுத்திணறல், சளி போன்றவற்றைக்குணப்படுத்துவதற்கு கொஞ்சம் கிராம்பு சாப்பிட்டால் போதும். அனைத்திற்கும் எளிதில் விரைவில் தீர்வு காணலாம்.


இந்திய சமையல்களில் தனித்துவமான சுவைக்காகப்பயன்படுத்தும் உணவுப்பொருள்களில் ஒன்று தான் கிராம்பு.  ஆனால் இதனை நாம் சமையலுக்காக மட்டுமில்லாது நமக்கு ஏற்படும் சில உடல் நலக்குறைப்பாடுகளுக்கும் கிராம்பை தான் நாம் தேர்ந்தெடுப்போம். ஆம் பல் வலியா, மாத்திரையெல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டும், வலிக்கிற இடத்துல இரண்டு கிராம்ப வச்சுக்க அதுவே சரியாக்கிடும் என்று நம் முன்னோர்கள் அடிக்கடி கூறுவதைக் கேட்டிருப்போம். அதற்கேற்றால் போல் கிராமில் பல்வேறு மருத்துவக்குணங்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக பல்வலி மட்டுமில்லாது சளி, இருமல், மூச்சுத்திணறல், குமட்டல், செரிமானக் கோளாறுகளைச் சரி செய்வதற்கும் கிராம்பை நாம் பயன்படுத்தி வருகிறோம்.





அதிலும் கொரோனா காலக்கட்டத்தில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கவும், நோய் தொற்று பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மாஸ்க் போட்டிருந்தாலும், கொஞ்சம் கிராம்பு கையோட எடுத்துக்கொண்டு செல்வதோடு அதனை அடிக்கடி சாப்பிடவும் அறிவுறுத்தினார்கள். முக்கியமாக கிராம்பு நீரழிவு நோயை நிர்வகிக்கவும் உதவுவதாகக் கூறப்படும் நிலையில் எப்படி உபயோகப்படுத்தப்படுகிறது என இங்கே நாமும் அறிந்துக்கொள்வோம்.


கிராம்பில் உள்ள ஆண்டிசெப்டிக் பண்புகளுடன், நீரிழிவு நோய்க்கான அழற்சி எதிர்ப்பு, வலி ​​நிவாரணி மற்றும் செரிமான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. மேலும் உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது மற்றும் இன்சுலின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. மேலும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.  எனவே நீரழிவு நோயாளிகள் கிராம்பை அதிகம் உணவு முறைகளில் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு  கிராம்பை அப்படியே சாப்பிட முடியவில்லை என்றாலும் கிராம்பை பொடியாக்கி, அதனைப்பயன்படுத்தி தேநீர் செய்து பருகலாம்.


கிராம்பு தேநீர் செய்யும் முறை:


முதலில் கிராம்பை பொடியாக கரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதனுடன் கிராம்பு பொடியைச் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி பருகலாம். உங்களது சுவைக்காக சர்க்கரை, டீத்தூள் சேர்த்து உபயோகிக்கலாம்.





மேலும் கிராம்பை நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ளும் போது, சளிப்பிரச்சனை, முகப்பரு மற்றும் தழும்புகளைப் போக்க உதவியாக உள்ளது. இதோடு கிராம்பில் சிறிது தேன் மற்றும் ஒரு துளி சுண்ணாம்பு சேர்ந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவினால், பேஸ்பேக் போட்டது போன்று முகம் பளபளப்பாக இருக்கும். இதோடு கிராம்பு ஒரு கிருமி நாசினியாகவும், வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது. எனவே உங்களது உடல் நலம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், பிரியாணி சமைக்கும்  போது மட்டுமில்லாமல் அனைத்து உணவுகளையும் சிறிது கிராம்பு அல்லது கிராம்பு பொடியைப் பயன்படுத்த ஆரம்பியுங்கள்.