நடிகை ஷெரினின் கிளாமர் நடன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
நடிகை ஷெரின் கடந்த 2002 இல் வெளிவந்த 'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு, திகில்-த்ரில்லர் படமான 'விசில்' திரைப்படத்தில் திகிலூட்டும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன்மூலம் அதிக ரசிகர்களையும் தமிழ் சினிமாவில் பெற்றார். நடுவில் சில ஆண்டுகளாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த ஷெரின், தமிழ் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிக ரசிகர்களை பெற்றார்.
இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்களை கொண்ட ஷெரின், சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இதனால் அவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போது, ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சேலையில் ஸ்லோ மோஷனில் நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இது சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஷெரின். சமீபத்தில் ‘ரஜினி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அவரது நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோ:
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்