நடிகர் அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி 24-ந் தேதி வெளியானது வலிமை திரைப்படம். அஜித் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பிரம்மாண்ட வெற்றி பெற்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், வலிமை படத்தின் 25வது நாள் இன்று திரையரங்குகளில் வெற்றிகரமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


















அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படம் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக படத்தின் படப்பிடிப்பு சுமார் இரண்டரை ஆண்டுகள் நடைபெற்றது. இதனால், படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. படம் வெளியானபோது யூ டியூப் விமர்சகர்கள் பலரும் படத்திற்கு நெகட்டிவான விமர்சனங்கள் அளித்தபோதும், படம் பெண்கள் மற்றும் தாய்மார்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும், படத்தின் நீளமும் 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.






















இந்த நிலையில், தமிழகம் முழுவதும் வலிமை திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் திரையரங்குகளில் வலிமை படத்தின் 25வது நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.