நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் பழங்கள், காய்கறிகள், இறைச்சி என உணவில் எடுத்துகொள்ள வேண்டும். அதோடு தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
குளிர்காலம், மழைக்காலம் தொடங்கிவிட நிலையில், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது நல்லது. அன்றாட உணவுகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியுமா என்றால் ஆம் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அப்படியே உங்கள் உடலும் இருக்கும். அதாவது உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுகளை சாப்பிட்டீர்கள் என்றால் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஹார்வேர்ட் பல்கலைக்கழத்தின் ஆய்வு ஒன்றில் ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுகளான பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் எந்தவித பலனும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
கிச்சடி
பலருக்கும் கிச்சரி பெரிதாக பிடிக்காது என்றே சொல்லாலாம். ஆனால், இந்திய உணவாக கிச்சடி ஊட்டச்சத்து மிகுந்த உணவாகும். தேவையான பருப்பு வகைகள், காய்கறி என எல்லாமும் இதில் உள்ளது. ஊட்டச்சத்து மிகுந்த உணவு. சாம்பார் சாதமும் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்து நிறைந்ததுதான். பருப்பு, அரிசி, காய்கறி என எல்லாம் இருக்கும்.
பருப்பு சாதம்
டயட் இருப்பவர்கள் வெள்ளை சோறை தவிர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். முற்றிலுமாக தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார்கள் நிபுணர்கள். அளவில் வேண்டுமாலும் சமரசம் இருக்காலம். ஆனால், வெள்ளை சோறு இல்லாமல் சாப்பிட வேண்டும் என்று இல்லை. சரிவிகித உணவு என்பது எப்போதுமே முக்கியம். அதோடு, பருப்பு புரதச்சத்து நிறைந்தது.
ரொட்டி சப்ஜி
சப்பாத்தி சப்ஜி. ரொம்ப ஆரோக்கியம் நிறைந்த உணவு. நிறைய காய்கறி இல்லையெனில் ஒரேயொரு காய்கறி என எதை சேர்த்தும் செய்யலாம். சப்பாத்திக்கு ஏற்ற சைடிஷாக இருக்கும்.
ரசம்
ரசம் பாரம்பரியமான உணவுகளில் ஒன்று. தென்னிந்திய உணவுகளில் மிகவும் பிரபலமானது. இட்லி, வடை, தோசை, சாதம் என ரசம் எல்லா உணவுகளோடு செட் ஆகும். ரசம் பல்வேறு வகைகளில் செய்யப்படுகிறது. மிளகு, சீரகம், மஞ்சள், தக்காளி, பூண்டு என ரசம் தாயரிக்க பயன்படுத்தப்படும் எல்லாவற்றிலும் நிறைய ஊட்டச்சத்து இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
சாலட், சூப் வகைகள்
பழ சாலட், காய்கறி , இறைச்சி சாலட் உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் தருபவை. சூப் சிறந்த சாய்ஸ்.. இதோடு ஜூஸ் குடிப்பதும் நல்லது. பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.
ஊட்டச்சத்து மிகுந்த கேரட்
கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்றவற்றிற்கு உதவுவதாக நிபூனர்கள் தெரிவிக்கின்றனர். இதில் அதிகமாக உள்ள நார்ச்சத்து குட் பாக்டீரியாக்களை அதாவது உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய பாக்டீரியாக்கை உருவாக்குகிறது. ரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் குறைக்க உதவும். இதயப் பிரச்னைகள் இரத்தக் கொழுப்பு அதிகரிப்பால் ஏற்படக்கூடியது. கேரட்டை அதிகமாக சாப்பிட்டால் இரத்தக் கொழுப்பு குறையும்.