ஊட்டச்சத்து நிபுணர்கள் காலை உணவாக கஞ்சியை பரிந்துரை செய்கின்றனர். மிகவும் எளிமையான மற்றும்  சத்தான உணவாகும் . அவசரத்தில் காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு இது சிறந்த மாற்று உணவாகும்.


தேவையான பொருள்கள்


1/2 கப் - தேங்காய் பால்


1/2 கப் -  ஓட்ஸ்


1/2 கப் - தண்ணீர்


1/4 டீஸ்பூன் வெண்ணிலா சாறு


 விருப்பப்படி பழங்கள்


செய்முறை



  • ஓட்ஸை தண்ணீரில் வேகவைத்து, அதனுடன் வெண்ணிலா சாறு சேர்த்து கொள்ளவும்.

  • நன்றாக வேகவைத்த பின் அதனுடன் தேங்காய் பால் சேர்க்கவும்.

  • அதன் மேல் விருப்பத்திற்கு ஏற்ப பழங்கள் சேர்த்து எடுத்து கொள்ளலாம்.


பின் குறிப்பு - ஓட்ஸ்க்கு பதிலாக சிறுதானியங்களாக திணை, வரகு, கம்பு, சோளம், குதிரைவாலி, சாமை ஏதேனும் ஒன்றை மாற்றி எடுத்து கொள்ளலாம். 


பயன்கள்



  • இது ஊட்டச்சத்து மிக்க உணவாகவும்,இதில் பழங்கள் சேர்ப்பதால் ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின், தாதுக்கள் உடலுக்கு கிடைக்கும்.

  • உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் ஒரு வேலை உணவாக எடுத்து கொள்ளலாம்.

  • இது மிகவும் எளிமையான வயதினரும் எடுத்து கொள்ளும் உணவு.

  • விரைவில் செரிமானம் ஆகும் மற்றும் புரத சத்து மிக்க உணவு


தேங்காய் பால் எடுத்துக்கொள்ளும் போது பலருக்கும் பல விதமான சந்தேகங்கள் வரும் . சந்தேகங்களுக்கான விளக்கங்கள் இதோ




தேங்காய் எடுத்து கொள்வது உடலுக்கு நல்ல கொழுப்பை தருகிறது. தேங்காய் பற்றி பல விதமான தகவல்கள் வந்தன. அதாவது, தேங்காய் கொழுப்பு சத்து மிக்க உணவு. அதனால் எடுத்து கொள்ள கூடாது என்று பல தகவல்   இருந்தது.குறிப்பாக இதய நோய் இருப்பவர்கள் எடுத்துக்கொள்ள கூடாது. உடல் எடை குறைபவர்கள் எடுத்து கொள்ள கூடாது என பல தகவல்கள் வந்து கொண்டு இருந்தது. ஆனால், இது உண்மை இல்லை. தேங்காய் உணவு எடுத்து கொள்வது ,  உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடல் எடை குறைக்கவும் உதவி செய்கிறது. அமெரிக்கா ஹார்ட் அஸோஸியேஷன்  நடத்திய ஆய்வில் தேங்காய் இருதய  தடுக்கிறது என கண்டறிந்துள்ளனர். அதனால் எந்த விதமான குழப்பமும் இல்லாமல் இந்த தேங்காய் பால் கஞ்சியை அனைவரும் எடுத்து கொள்ளலாம். இருதய அறுவை சிகிச்சை செய்தவர்கள், மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு இதை எடுத்து கொள்ளலாம். மேலும் தேங்காய் பாலுடன் சேர்க்கும் , சிறுதானியங்கள் உடலுக்கு சத்து மிக்கதாகவும், நார்சத்து மிக்க உணவவாகவும் இருக்கும். இது வயிறுபுன், நெஞ்செரிச்சல்,  செரிமான பிரச்னை உள்ளவர்கள் என அனைவரும் இதை எடுத்து கொள்ளலாம்.


சுற்றிப்பார்க்க எப்படி கேரளா ரம்யமாக இருக்குமோ, அதே போன்று தான், கேரள உணவுகளும். வேறு விதமான ருசியில் நாவில் நடனமாடும்.