டெல்லி விமான நிலையத்தில் தெரு நாய்கள் சுற்றித்திரிவது நம் நாட்டை பற்றி வெளிநாட்டினருக்கு நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தாது என்றும், விமான நிலையத்தில் பயணிகளுக்கு கொடுக்கப்படும் ஆர்.டி.பி.சி.ஆர்., படிவத்தை நிரப்ப மேசை வசதி கூட இல்லை எனவும் பிரபல இயக்குநர் ராஜமௌலி கூறியுள்ளார்.


‘பாகுபலி’ திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டவர் இயக்குநர் ராஜமௌலி. தெலுங்கில் மட்டும் தெரிந்த முகமாய் இருந்த ராஜமௌலி, பாகுபலிக்கு பிறகு அவர் அடுத்த என்ன படம் இயக்குவிருக்கிறார் என்ற ஆவலுடன் இருந்த நிலையில்,  ‘ஆர்.ஆர்.ஆர்.,’  என்ற பிரமாண்ட திரைப்படத்தை இயக்க உள்ளார் என்ற செய்தி வெளியானது. அந்தப் படத்தில் பிரபல தெலுங்கு முன்னணி நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்தப் படம் தொடர்பான அப்டேட்களை அவ்வப்போது படக்குழு வெளியிட்டு வருகிறது. இந்தப் படம் தொடர்பான வேலைகளில் ராஜமௌலி மும்முரமாக உள்ளார்.


Suicide In IIT | ”என்ன செய்கிறேன் என்றே தெரியவில்லை” - ஐஐடி வளாகத்தில் இஸ்ரோ விஞ்ஞானி மகன் தற்கொலை..!




இந்நிலையில், ராஜமௌலி டெல்லி விமான நிலையம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.


தனது முதல் பதிவில், “நான் லூஃப்தான்ஸா விமானத்தின் மூலம் டெல்லி விமான நிலையத்திற்கு நள்ளிரவு 1 மணிக்கு வந்தடைந்தேன். அப்போது, நான் உள்பட அனைத்து பயணிகளுக்கும் கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டன. படிவத்தை நிரப்ப மேசை வசதி கொடுக்கப்படவில்லை. இதனால், அனைவரும் விண்ணப்பப் படிவங்களை தரையில் உட்கார்ந்து கொண்டும், சுவற்றில் வைத்து எழுதியும் பூர்த்தி செய்துக்கொண்டிருந்தோம். இப்படி செய்வது நன்றாக இல்லை. விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்ய மேசைகள் கொடுப்பது எளிய சேவை” எனப் பதிவிட்டுள்ளார்.






 


அடுத்த பதிவில், ‘விமான நிலையத்தின் வெளியில் தெரு நாய்கள் அதிகமாக இருந்தன. டெல்லி விமான நிலையத்தில் தெரு நாய்கள் சுற்றித்திரிவது நம் நாட்டை பற்றி வெளிநாட்டினருக்கு நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தாது” எனப் பதிவிட்டுள்ளார்.






தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டு வரும் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம், இந்தாண்டு அக்டோபர் 13ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாக உள்ளது. டப்பிங் பணிகள், இரண்டு பாடல் காட்சி பணிகளில் பிஸியாக இருக்கும் ராஜமௌலி, டெல்லி விமான நிலையம் குறித்து செய்த ட்வீட் சமூகவலைதளங்களில் வைரலாகி, பேசுப்பொருளாகியுள்ளது.