பிப்ரவரி மாதம் இந்தியாவில் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலா தளங்களுக்கு சென்றுவர ஏதுவான வானிலையை வழங்கும் ஒரு மாதமாகும். கடற்கரைகள், மலைகள் மற்றும் வெளிப்புற சாகசங்கள் வரை, பல விஷயங்கள் உள்ளன. இந்த மாதங்களில் மலைகளில் வானிலை தாங்கமுடியாத அளவு குளிராக இருக்காது, அதே சமயத்தில் சூடான பகல் மற்றும் குளிர் இரவுகள் இரண்டும் கிட்டத்தட்ட சமமான நேர அளவை கொண்டுள்ளன. கடற்கரையில் ஈரப்பதம் இல்லாமல் இருக்கும், ராஜஸ்தான் போன்ற பாலைவனங்களில் இரவுகளில் நல்ல காற்று வீசும், இவை பயணத்தை மேலும் மகிழ்ச்சி ஆக்குகின்றன. விடுமுறையில் வெளியே செல்ல திட்டமிட்டிருந்தால், இந்த பிப்ரவரியில் நீங்கள் செல்லக்கூடிய 5 அழகான இடங்கள் இதோ.
குல்மார்க், காஷ்மீர்
குல்மார்க் குளிர்காலத்தில் தூய, வெள்ளை பனியின் ஆழமான அடுக்கில் போர்வையாக இருக்கும். இந்த பனி பிப்ரவரியில் உருகத் தொடங்குகிறது, இதனால் பசுமையை பார்க்கவும், கோடையின் அணுகுமுறையை அறியவும் முடிகிறது. இங்கு சென்றால் ஸ்னோபோர்டிங், பனி நடைப்பயிற்சி அல்லது அருகிலுள்ள பல ரிசார்ட்டுகளில் ஒன்றில் ஓய்வெடுப்பதன் மூலம் வழக்கமான வாழ்வில் இருந்து சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.
பிர் பில்லிங், ஹிமாச்சல்
பிரமிக்க வைக்கும் வானம், புதிய காற்று மற்றும் பசுமையான சுற்றுப்புறங்கள் ஆகியவற்றால் பிர் பில்லிங் பிப்ரவரி மாதத்தில் ஒரு அருமையான இடமாக மாறுகிறது. நீங்கள் சாகச விளையாட்டுக்களை விரும்பினால், பிர் பில்லிங் உங்களுக்கான இடம். இந்த இடம் பாராகிளைடிங்கிற்கு பிரபலமானது. கூடுதலாக, இடம் பல்வேறு ஹைகிங் மற்றும் நேச்சர் வாக்கிங்கை வழங்குகிறது.
கோவா
இந்தியாவில் பிப்ரவரியில் செல்ல வேண்டிய முக்கிய இடங்களில் ஒன்று கோவா. கோவாவில் மிகவும் பரபரப்பான வணிக மாதங்கள் நவம்பர் முதல் ஜனவரி வரை ஆகும். இருப்பினும், நீங்கள் சுற்றிப்பார்க்க விரும்பினால் பிப்ரவரி மிகவும் அமைதியான மாதமாகும். கோவா ஆண்டின் எல்லா நேரங்களிலும் இருப்பதைப் போலவே இம்மதமும் வசீகரமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரியில் நடக்கும் கோவா கார்னிவல், கோவா மாநிலத்தை பரபரப்பான மேடையாக மாற்றுகிறது, அதுவே பிப்ரவரி ஸ்பெஷல்.
ஜோத்பூர்
இந்தியாவில் பிப்ரவரியில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் ஒன்றான ஜோத்பூர், சூடான பகல் மற்றும் குளிரான இரவு என்ற சமநிலையான வானிலையைக் கொண்டுள்ளது. இந்த நகரின் பல கோட்டைகளைப் பார்ப்பதற்கு வசதியான மற்றும் மகிழ்ச்சியான மாதமாக இது இருக்கும். பரபரப்பான சந்தைகளைப் பார்வையிடவும், நீல நகரத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகளைப் பார்க்கவும், பாரம்பரிய ராஜஸ்தானி பொருட்களை இங்கே வாங்கவும் இங்கு செல்லலாம். பாலைவனச் சிறப்புகளையும் பாரம்பரிய ராஜஸ்தானி தாலியையும் (விருந்து) சுவைக்க மறக்காதீர்கள், இதில் கேர் சங்ரி மற்றும் பஜ்ரே கி ரொட்டி போன்ற உணவுகள் அடங்கும், அவை இன்னும் ஸ்பெஷல்.
பாண்டிச்சேரி
இந்தியாவின் அழகான யூனியன் பிரதேசமான கடலோர நகரம், வலுவான பிரெஞ்சு கலாச்சார தாக்கங்களை இன்னும் வெளிப்படுத்துகிறது (அதன் காலனித்துவத்தின் காரணமாக). இந்த நகரம் ஒரு சிறிய பிரெஞ்சு நகரத்திலிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் கொண்டுள்ளது, தெளிவான நீர், வெள்ளை மணல் மற்றும் பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை உட்பட. அது மட்டுமல்லாமல், இப்பகுதி இளைஞர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கிறது, நீங்கள் தங்குவதற்கு வசதியாக மலிவான உணவகங்கள் மற்றும் தங்குமிடங்கள் இங்கு ஏராளமாக உள்ளன. மேலும் கொண்டாட்டங்களுக்கு தேவையான கேளிக்கை விடுதிகளும் அதிகம் என்பதால், இளைஞர்களின் விருப்பமாக இது உள்ளது.