தலைமுடி நன்கு வளர்வதற்கு இரும்புச்சத்து நிறைந்த உணவுப்பொருள்களை உட்கொள்ள வேண்டும் எனவும், கறிவேப்பிலையைப் பொடி செய்து உணவில் சேர்த்துக்கொண்டால் போதும் என்கிறார் பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத்..


பெண்களுக்கு முக அழகினைக்காட்டிலும் கூடுதல் அழகுச்சேர்ப்பது அவர்களின் தலைமுடிதான். ஆனால் பெரும்பாலோனோருக்கு  முடி உதிர்தல் பிரச்சனைத் தான் அதிகளவில் தற்போது ஏற்படுகிறது. இதற்காகப் பலர் பல்வேறு சிகிச்சை முறைகள், ஷாம்புகளை மாற்றுவது, அழகு நிலையம் சென்று பராமரிப்பது போன்ற பல்வேறு வழிமுறையை மேற்கொள்கின்றனர். ஆனால் அது எதுவும் தேவையில்லை நன்றாக முடிவளர்வதற்கு அயன் நிறைந்த உணவுகளை நாம் உட்கொண்டால் போதும் என்கிறார் நம் பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத்.. எப்படி என்ன சொல்லியிருக்கிறார் என்று தெரிந்துக்கொள்வோம்..



பிக்பாஸ் புகழ் மற்றும் முன்னாள் செய்தி வாசிப்பாளரான அனிதா தனது கணவருடன் சேர்ந்து Anithasampath vlog என்ற யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் அவ்வப்போது நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளக்கூடிய சில விஷயங்கள் குறித்து அதில் பதிவிட்டுவருகிறார். இந்நிலையில் அவர் முடி உதிர்தல் மற்றும் முடியை எப்படி வளர்ப்பது குறித்து வீடியோக்களை பதிவிட்டிருந்தார். இதனையடுத்து ரசிகர்கள் பலர் உங்களுடைய அழகிய முடிக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்குப் பதிலளிக்கும் விதமாக அனிதா சம்பத் இரண்டு அசத்தலான டிப்ஸ்களைச் சொல்லியிருப்பதோடு, அதனை எப்படி செய்யவேண்டும் என்றும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.


முதலில் முடி நன்றாக வளர்வதற்கு ஜெனிடிக் ஒரு காரணமாக அமைகிறது என தெரிவித்த அனிதா, முடி வளர்வதற்கு அயன் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். அதற்கு அயன் நிறைந்த நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலை ஜூஸை நாம் வாரத்திற்கு  3 முறையாவது சேர்த்துக்கொள்ளவேண்டும். அயன் சத்துக்கள் நமக்கு அதிகளவில் கிடைக்கும் போது முடி வளர்ச்சிக்கு நல்ல பலனளிக்கிறது என்று தெரிவித்ததோடு அதனை எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றியும் கூறியுள்ளார் அனிதா. “ இதற்கு முதலில் நெல்லிக்காய், கறிவேப்பிலை, வெள்ளரிக்காய், இஞ்சி, எலுமிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர்  நெல்லிக்காய், கறிவேப்பிலை, வெள்ளரிக்காய், இஞ்சியை மிக்ஸில் எடுத்து அரைத்துக்கொள்ள வேண்டும். முன்னதாக எலுமிச்சை சாறை அதில் ஊற்றிக்கொள்ள வேண்டும். இதன்பிறகு இந்த ஜூஸை வடிகட்டி எடுத்துக்கொண்டு தேன் கலந்து சாப்பிட வேண்டும். சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்துக்கொண்டால் நல்லது என கூறியிருக்கிறார். அதற்குப்பதில் உப்பு கலந்து சாப்பிடலாம்.





மேலும் நம்மில் பலருக்கு கறிவேப்பிலையை ஒதுக்கி வைத்து சாப்பிடுவார்கள். எனவே முடி வளர்ச்சியை அதிகப்படுத்த உதவும் கறிவேப்பிலையை பொடியாக்கி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதனைத் தயார் செய்வதற்கு முதலில் உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, மல்லி, மிளகாய்வத்தல், கறிவேப்பிலை இலைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வானலில் இதனை நன்றாக வறுத்தெடுத்துக்கொண்டு மிக்ஸியில் எடுத்து அரைத்துக்கொண்டால் கறிவேப்பிலைப்பொடி தயாராகிவிடும்.


இந்த இரண்டு ரெசிபிகளையும் தினமும் நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ளும் போது முடி நன்றாக வளர்வதற்கு உதவியாக இருக்கும். மேலும் தலைக்குளிக்கும் முன்னர் நன்றாக எண்ணெய் தேய்த்து சுமார் 1 மணி நேரத்திற்குப் பிறகு குளிக்க வேண்டும். இதோடு நன்றாக முடிவளர்வதற்கு மரச்செக்கால் ஆன எண்ணெய்யுடன் நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் முடி வளர்வதற்கான மூலிகைகளை சேர்த்துக்கொண்டு தினமும் உபயோகிக்கும் போது நிச்சயம் நல்ல பலன் அளிக்கும்.