உணவு பாதுகாப்பு தினம் :


ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7-ஆம் தேதி உணவு பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. உணவினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) 2018 இல் உலக உணவுப் பாதுகாப்பு தினத்தை கடைப்பிடிக்க தீர்மானம் நிறைவேற்றியது.


WHO மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), உறுப்பு நாடுகள் மற்றும் பிற பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் கூட்டாக நிறைவேற்றப்பட்டு ஐந்து வருடங்களாக இது கடைப்பிடிக்கப்படுகிறது.






தீம் :


"பாதுகாப்பான உணவு, சிறந்த ஆரோக்கியம்", என்பதுதான் இந்த ஆண்டின் கருப்பொருள். இது மனித ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதில் பாதுகாப்பான, ஊட்டச்சத்து உணவின் பங்கை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.






உணவு பாதுகாப்பு பற்றி தெரிந்துக்கொள்ளவேண்டிய முக்கிய  விஷயங்கள்:


உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, 600 மில்லியன் மக்கள் உள்ள`1 உலகில் 10 பேரில் 1 பேர்  நோய்வாய்ப்படுகிறார்கள்.மற்றும் 420,000 பேர் ஒவ்வொரு ஆண்டும் அசுத்தமான உணவை சாப்பிட்டு உயிரிழக்கின்றனர்.


அசுத்தமான உணவின் மூலம் உடலில் நுழையும் பாக்டீரியா, வைரஸ்கள், ஒட்டுண்ணிகள் அல்லது ரசாயனப் பொருட்களால் 200-க்கும் மேற்பட்ட உணவுப்பழக்க நோய்கள்  ஏற்படுகின்றன.  மோசமான சூழ்நிலையில், இந்த நோய்கள் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.


பாதுகாப்பற்ற உணவினால் கிட்டத்தட்ட 40 சதவிகித குழந்தைகள் பல்வேறு வகையான நோய்களுக்கு ஆளாகின்றனர். அதில் ஒவ்வொரு ஆண்டும் 125,000 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துவிடுகின்றனர்.


உணவு மூலம் பரவும் நோய்கள் சமூக-பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கின்றன, சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புகளை சிரமப்படுத்துகின்றன மற்றும் தேசிய பொருளாதாரங்கள், சுற்றுலா மற்றும் வர்த்தகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் .