தொலைத்தொடர்பு நிறுவனங்கள்..
நாட்டின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் ,ஜியோ, வோடஃபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் முன்னதாக நவம்பர் 2021 இல் விலைகளை 25% வரை உயர்த்தின.தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விலைகளை 10 முதல் 12% வரை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளன. இது ஒரு பயனருக்கான சராசரி வருவாயை (ARPU) சுமார் 10% அதிகரிக்கும்.
நவம்பர் 2021 இல் கட்டணங்களை ஏறக்குறைய 25% உயர்த்திய போதிலும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து சிக்கலை எதிர்க்கொண்டு வருவதால், இது மற்றொரு கட்டண உயர்வுக்கு வழி வகுத்துள்ளது .
ஜியோ போன்..
இந்நிலையில் தற்போது ஜியோ ஒரு முக்கிய ப்ளானின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. ஆனால் இது அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் இல்லை என்பது ஆறுதல். ஜியோ போன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கே இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ போனின் தற்போதைய திட்டத்தின்படி ரூ.749க்கு ஒரு ப்ளான் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தின்படி ஒரு வருடத்துக்கு இலவச வாய்ஸ் காலிங், 24 ஜிபி இண்டர்நெட் டேட்டா, ஜியோ செயலின் இலவச சந்தா ஆகியவை கொடுக்கப்படும். இந்நிலையில் இந்த ப்ளானில் தொகை ரூ.899ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ரூ.150 கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஜியோ போன் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரூ.1499க்கும், ரூ.1999க்கு ஜியோ போன்கள் வாங்கினால் இலவச அழைப்புகள், இண்டர்நெட் சேவைகள் அனைத்தும் கிடைக்கும்.
5ஜி அலைக்கற்றை..
இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏற்கனவே அதிகப்படியான கடன் சுமையும், போட்டியும் எதிர்கொண்டு வரும் நிலையில் மத்திய அரசு 5ஜி அலைக்கற்றைக்கான விலையை குறைத்திருப்பது, நிறுவனங்களால் சமாளிக்க முடியவில்லை என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. என்னதான் விலையை உயர்த்தினாலும் கூட 5ஜி பயன்பாடு அதிகரிக்க தொடங்கினால் , வருகிற 2023 நிதியாண்டின் இறுதிக்குள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சுமார் 40 மில்லியன் புதிய பயனர்களைச் சேர்க்கும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கணித்துள்ளனர். ஆய்வாளர்களின் கூற்றுப்படி, புதிய சந்தாக்கள் தற்போது 60% அளவில் கிராமப்புரங்களில் அதிகரிக்கும் என கூறுகின்றனர்.
தொலைத்தொடர்பு நிறுவனங்களை பொருத்தவரையில் முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ மற்றும் சுனில் மிட்டல் தலைமையிலான ஏர்டெல் ஆகியவை புதிய சந்தாதாரர்களை வ்ழங்கி பயனாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் வோடபோன் ஐடியா சுமாரான லாபத்தை பெறலாம். எது எப்படியோ இந்த புதிய அறிவிப்பு பயனாளர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. அனைத்து பொருட்களின் விலை உயர்வு பொதுமக்களுக்கு வரும் காலங்களில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தலாம்