தினம் முடி உதிர்தல் இயல்பாக நடக்க கூடியது. அதாவது ஒரு நாளைக்கு 70 -100 முடி உதிரும்.  இது உடலில் இயற்கையாக நடக்கும் சுழற்சி ஆகும். இதை இப்படியே தொடர்ந்தால், சுழற்சியில் முடி வளர ஆரம்பிக்கும். சுழற்சியில் பழைய முடி  உதிர்ந்து புதியதாக முடி வளர ஆரம்பிக்கும். இது ஒரு சுழற்சியாக உடலில் நடக்கும். இது அளவுக்கு அதிகமாக உதிர்ந்தால் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். அதற்கு உடல் ஆரோக்கியம் முக்கியம். உடலில் ஊட்டச்சத்து பற்றாக்குறையினாலும், வேறு ஏதேனும்

   பிரச்சனை இருந்தாலும், முடி உதிர்தல் ஆரம்பிக்கும். சில நாட்பட்ட நோய்களுக்கு முடி உதிர்தல் ஒரு அறிகுறியாக இருக்கும்.


என்ன காரணங்களால் முடி  உதிர்கிறது என தெரிந்து கொள்ளலாம்.


                                              


குடல் ஆரோக்கியம்:


குடலில் வளரும் நல்லது செய்யும் பாக்டீரியா குறைவாக இருந்தால் அது ஊட்டசத்து குறைபாட்டை தரும். மேலும் வயிறு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவது மிகவும் முக்கியம். மேலும், கழிவுகள் தினம் வெளியேற வேண்டும். இது குடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.


ஊட்டச்சத்து:


ஊட்டச்சத்து குறைபாடு முடி உதிர்வதற்கு முக்கிய காரணம். அன்றாடம்  உணவில் அனைத்து ஊட்டச்சத்துகள் நிறைந்த சரிவிகித உணவு எடுத்து கொள்ள வேண்டும். வைட்டமின் E சத்து நிறைந்த உணவை எடுத்து கொள்வது முடி வளர்வதற்கு உதவியாக இருக்கும் மேலும், வைட்டமின் மற்றும் தாது உப்புகள்  உணவில் சேர்ப்பதை உறுதி  படுத்தி கொள்ளவும்.




தைராய்டு ஹார்மோன்:


தைராய்டு ஹார்மோன் குறைபாடு காரணமாக, முடி உதிர்தல் இருக்கும். அதனால் ஹார்மோன் மாத்திரைகளை அவ்வப்போது எடுத்து கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம்.


ஹார்மோன் டெஸ்ட் எடுத்து கொள்வது நல்லது. குறிப்பாக ப்ரோலக்ட்டின் , ஈஸ்ட்ரோஜென், ப்ரோஜெஸ்ட்டிரான் , மற்றும் டெஸ்டோஸ்ட்டிரோன் போன்ற ஹார்மோன் பரிசோதனைகள்  செய்வது நல்லது.




உணவில் கவனம் செலுத்துங்கள்:


அனைத்து பரிசோதனைகளையும் செய்வதற்கு முன், உணவில் கவனம் செலுத்த வேண்டும். அன்றாடம் என்ன மாதிரியான உணவுகள் முடி வளர்வதற்கு முக்கிய காரணமாக அமையும். துரித உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக உப்பு சத்து உள்ள உணவுகள் எடுத்து கொள்வது, முடி உதிர்வதற்கு  காரணமாக அமையும். அதனால் என்ன உணவு எடுத்து கொள்கிறீர்கள் என கவனம் செலுத்துங்கள்




மன அழுத்தம்:


மன அழுத்தம் , அதிகமாக இருப்பவர்களுக்கு முடி உதிர்தல் மற்றும், இளநரை பிரச்னை  வரும்.இன்று பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் மனஅழுத்தமம் என்ற வார்த்தை பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள் . இது உண்மை தான். ஏதேனும் ஒரு ஸ்ட்ரெஸ் ஆகா இருந்தாலும் முடி உதிர்தல் பிரச்னை வரும்.