நாம் அன்றாடம் உணவில் தவிர்க்கமுடியாமல் பயன்படுத்துவது எண்ணெய்தான். அவை சுத்தமாகவும் தரமானதாகவும் இருத்தல் நம் நீண்ட ஆயுளுக்கு மிகவும் இன்றியமையாததாகும். அதுபோல சந்தையில் நல்ல கலப்படமற்ற எண்ணெய்களை கண்டறிவதும் மிகவும் கடினமானதாக இருக்கிறது. அதற்கான வழியை FSSAI மக்களுக்காக விளக்குகிறது.


FSSAI வீட்டில் நமது உணவில் கலப்படம் இருப்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று விளக்கியுள்ளது. நீண்ட காலம் கலப்படமான உணவு பயன்படுத்துவது உடலுக்கு தீங்கு விளைவிக்க வாய்ப்புள்ளது, அதனால்தான் FSSAI, #DetectFoodAdulterents என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்தத் தொடரில், ஒவ்வொரு வாரமும் அவர்கள் நாம் உட்கொள்ளும் உணவில் கலப்படம் உள்ளதா இல்லையா என்பதைச் சரிபார்க்க, வீட்டில் முயற்சி செய்யக்கூடிய ஒரு எளிய செயல்முறையை பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த வாரம், சமையல் எண்ணெயில் மெட்டனில் மஞ்சள் போன்ற தடைசெய்யப்பட்ட நிறத்தை பயன்படுத்தியுள்ளார்களா என்று எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதற்கான சோதனை வீடியோவைப் பகிர்ந்துள்ளனர்.



வீடியோவில் குறிப்பிட்டுள்ளபடி எண்ணெய் கலப்படத்தை சரிபார்க்கும் நடைமுறை:



  1. ஒரு சோதனை குழாயில் 1 மிலி எண்ணெயின் மாதிரியை எடுத்துக்கொள்ளுங்கள்.

  2. அதனுடன் 4 மில்லி காய்ச்சி வடிகட்டிய நீரைச் சேர்த்து, சோதனைக் குழாயை லேசாக அசைக்கவும்.

  3. இந்த கலவையை 2ml மற்றொரு சோதனை குழாயில் எடுத்து, 2l செறிவூட்டப்பட்ட HCL ஐ கலவையில் சேர்க்கவும்.

  4. கலப்படமற்ற எண்ணெயின் மேல் அடுக்கில் எந்த நிற மாற்றமும் தென்படாது.

  5. மேல் அமிலத்தில் நிறம் மாறும்போது அது கலப்படமுள்ள எண்ணெய் என்று எடுத்துக்கொள்ளலாம்.



நிபுணர்களின் கூற்றுப்படி, மெட்டனில் மஞ்சள் என்பது இந்தியாவில் அனுமதிக்கப்படாத உணவு நிறமியாகும். தேசிய மருத்துவ நூலகத்தின் படி, மெட்டனில் மஞ்சள் மனித நுகர்வுக்கு ஏற்றதல்ல. உணவு வேதியியல் மற்றும் நச்சுயியல் இதழால் ஜனவரி 1993-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட விலங்கு ஆய்வின்படி, மெட்டனில் மஞ்சள் நீண்டகால நுகர்வுக்கும் மூளையின் சில பகுதிகளில் செரோடோனின், டோபமைன் மற்றும் நோராட்ரினலின் அளவுகளுக்கும் தொடர்பு உள்ளது. இது மூளையில் 'கற்றல்' திறனைக் குறைக்கிறது.


FSSAI ட்வீட்டின் படி, HCL அமிலம் கலப்பட எண்ணெய் மாதிரியில் இருந்து 'மெட்டனில் மஞ்சள்' போன்ற தடை செய்யப்பட்ட நிறத்தை பிரித்தெடுத்து அமில அடுக்கில் நிற மாற்றத்தைக் காட்டுகிறது, அதே சமயம் கலப்படமற்ற எண்ணெய் நிறத்தில் எந்த மாற்றத்தையும் காட்டாது.