கொரோனா  பெருந்தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக, முக கவசம் அணிவது,  தனி மனித இடைவெளி பின்பற்றுவது மற்றும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது போன்றவற்றை செய்வதன் பாதுகாப்பாக இருக்கலாம். தடுப்பூசி கண்டுபிடிக்க பட்டு முதல் டோஸ், இரண்டாம் டோஸ் ஊசிகள் அனைவர்க்கும் செலுத்தி கொண்டு இருக்கின்றனர். என்ன தான் தடுப்பூசி போட்டு கொண்டாலும், இந்த கொரோனா பெருந்தொற்று முழுமையாக நீங்கவில்லை. முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. சில நாடுகளில் அடுத்து அடுத்து புதிய வகை வைரஸ்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. பாதுகாப்பு கவசங்களை பின்பற்றுவதில் சில பிரச்சனைகள் இருக்க தான் செய்கிறது.


            

                                           


கை கழுவுவது மற்றும் தனி மனித இடைவெளி பின்பற்றுவது அனைவராலும் செய்ய முடியும். முக கவசம் நீண்ட நேரம் அணிந்து இருப்பதால் பெரும்பாலோனோர் தலைவலியை உணர்கின்றனர். இதற்கு என்ன தான் தீர்வு என தெரிந்து  கொள்ளலாம்.


நீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் காதுக்கு அருகில் இருக்கும் டெம்போமாண்டிபுலர் temporomandibular joint (TMJ) பகுதியில் வலி  ஏற்படும்.இது கீழ் தாடையை தலை எலும்புடன் சேர்த்து வைக்கும் பகுதி ஆகும். இறுக்கமான முக கவசம் அணிந்து இருக்கும் போது  தசை மற்றும் எலும்புகளில் வலி ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்து  பின்னர் அது தலை வலியாக மாறும்.




வலி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்



  • இறுக்கமாக முகக்கவசம் அணிவதை தவிர்த்திடுங்கள்

  • தாடை மற்றும் தசைகளை தளர்வாக இருப்பதை உறுதி படுத்தி கொள்ளுங்கள். முகக்கவசம் அணிந்த பிறகு லேசாக இருப்பதை உறுதி படுத்தி கொள்ளுங்கள்.

  • மனஅழுத்தமாக இருந்தாலும், இது போன்ற தலை வலி, தசை பிடிப்பு பிரச்சனைகள் வரும். ரிலாக்ஸாக இருக்க வேண்டும்.

  • தாடை பகுதிகளுக்கு சில எளிமையாக பயிற்சிகளை செய்யலாம். இது வலி வரமால் பாதுகாக்கும்.


மிக அதிகமாக தலை வலி வருகிறது. மேலும் தடுப்பூசி போட்டு  இருக்கிறோம்.அதனால் முகக்கவசம் அணியாமல் இருக்கலாமா என கேட்டால் கண்டிப்பாக இல்லை இப்போது இருக்கும் சூழலில் முகக்கவசத்தை தவிர்க்காதீர்கள். தடுப்பூசி போட்டு இருந்தாலும், முகக்கவசம் அணிவது கட்டாயம். தடுப்பூசி, முகக்கவசம், கைகளை கழுவுதல், தனி மனித இடைவெளி ஆகியவற்றை பின்பற்றுவது அடுத்தடுத்த கொரோனா பெருந்தொற்றில் இருந்து பாதுகாக்கும்.




முகக்கவசம் முழுமையாக மூக்கு, வாய், முழுவதும் மூடி இருப்பதை உறுதி படுத்த வேண்டும். அரைகுறையாக முகக்கவசம் அணிவது, தாடை  பகுதிக்கு மட்டும் முகக்கவசம் அணிவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.