நியூசிலாந்து நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது சகஜமான ஒன்று. ஏனென்றால் நியூசிலாந்து நாடு ‘ரிங்க் ஆஃப் ஃபையர்’ என்று குறிப்பிடப்படும் பகுதிகளில் ஒன்று. இந்த ரிங்க் ஆஃப் ஃபையர் பகுதியில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும். அதிலும் குறிப்பாக இங்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இங்கு பூமியின் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று உரசம் போது நிலநடுக்கம் ஏற்படும் சூழல் உருவாகும். 


இந்நிலையில் இன்று வழக்கம் போல் நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து தலைநகர் வெல்லிங்டனும் வடக்கு தீவில் தான் உள்ளது. அங்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் செய்தியாளர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக விளக்கி கொண்டிருந்தார். அப்போது நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் அவருடைய மேடை சற்று ஆடியது. 




அதற்கு அவர், இது ஏதோ ஒரு சாதாரண அதிர்வு அல்லது வேகமாக காற்றின் செயல் என்று கூறி கடந்துவிட்டார். அந்த சமயம் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வியை திரும்பியும் கேட்கும்படி கூறியுள்ளார். அதன்பின்னர் நியூசிலாந்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட செய்தியை கேட்டுள்ளார். அப்போது அங்கு தன்னுடன் மேடையில் இருந்த துணை பிரதமருக்கும் இது நிலநடுக்கம்போல் இல்லை என்று அவரும் கூறியதாக தெரிவித்தார். 


ஆனால் ரிக்டர் அளவில் 5.9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. நியூசிலாந்து நாட்டில் அடிக்கடி இந்த மாதிரியான நிலநடுக்கம் ஏற்படும் என்பதால் அவர்கள் இதை பெரிதாக கருதவில்லை என்று தெரிகிறது. இந்த நிலநடுக்கும் வடக்கு தீவில் அமைந்துள்ள டைமருணை பகுதியை மையமாக கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டில் 2011ஆம் ஆண்டு கிறிஸ்ட்சர்ச் நகரில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக 185 பேர் உயிரிழந்தனர். 


அதன்பின்னர் 2016-ஆம் ஆண்டு ரிக்டர் அளவில் 7.8 என்ற சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தெற்கு தீவான கைகோராவில் ஏற்பட்டது. அப்போது இரண்டு பேர் மட்டும் உயிரிழந்தனர். ஆனால் பல லட்சம் ரூபாய் வரை பொருட்சேதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் நியூசிலாந்து நாட்டின் மற்ற பகுதிகளிலும் நிலநடுக்கத்தின் பாதிப்பு உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: என்னது ஒரு வயசு குழந்தை வேலை செய்யுதா? 75 ஆயிரம் சம்பளமா? இதுதான் அந்த Insta வேலை