International Women’s Day2025: சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் மார்ச்,8-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்தாண்டு கருப்பொருள் என்ன, மகளிர் தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம் ஆகியவை பற்றி இங்கே காணலாம்.
சமூகத்த்ல் பெண்களுக்கு சம உரிமை, அவர்களுக்கான சம வாய்ப்புகள், பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்தநாள் கொண்டாடப்படுகிறது. ஆனால், ‘சர்வதேச உழைக்கும் மகளிர் தினம்’ எப்படி உருவானது என்பது தெரியுமா?
மகளிர் தின வரலாறு:
1910-ல் டென்மார் நாட்டில் சர்வதேச சோஹிலிஸ்ட் பெண்கள் மாநாடு நடைபெற்றது. இதில் மகளிர் தினம் கொண்டாடப்பட தீர்மானம் நிறைவேற்றியது. உழைக்கும் மகளிரின் உரிமைகள், பணி செய்யும் நேரத்திற்கு 8- மணி நேரமாக இருக்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு பிறகு,1911- முதல் பல்வேறு நாடுகளில் ஒவ்வொரு நாளில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வந்தது. சர்வதேச மகளிர் தினத்தை அதிகாரப்பூர்வமாக 1977ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது. 1917-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ம் தேதி ரஷ்யாவில் பெண் தொழிலாளர்களின் புரட்சி தொடங்கியது. அதன்பிறகு 1921-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ’சர்வதேச உழைக்கும் மகளிர் தினம்’ கொண்டாட தொடங்கப்பட்டது. பாலினச் சமத்துவததை உறுதி செய்வதும் இந்த நாளில் நோக்கமாகும்.
சர்வதேச மகளிர் தினம் கருப்பொருள்:
சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தின் இந்தாண்டிற்கான (2025) கருப்பொருள் 'Accelerate Action' என்பதாகும். பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவும் ரிசோர்ஸ், யுக்திகள், செயல்பாடுகள் ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும் என்பதே கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் தினத்தை கொண்டாடுவதன் நோக்கம்:
கல்வி, பணி என சமூகத்தில் எல்லா நிலைகளிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்குவதும் பாலினச் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதே இந்த நாளின் நோக்கம். ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களின் உரிமைகளை வழங்குவதை நாடுகளின் அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று ஐ.நா. தெரிவிக்கிறது. எந்தவொரு துறையிலும் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளைத் தடுக்க வேண்டும். இந்த நாளில், பெண்களின் உரிமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவது வழக்கம்.
சர்வதேச உழைக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!